விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

3

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..

இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது .. அதன் கிழக்கே இரண்டு புறமும் மிக மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறை இருந்தது (படத்தில் இருப்பது எட்டு சட்டி மணலில் ஒரு சட்டி சாம்பல் போட்டு கட்டிய சிமென்ட் படித்துறை .1988 வாக்கில் ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது…)

1837 இல் விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து 1887 இல் ஐம்பது ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக .. ஸ்ரீரங்கத்தில் 1600 ஏழைகளுக்கு உணவும் 420 பேருக்கு உடையும் வழங்கப் பட்டது..

ஸ்கூல் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு அவர்கள் கோவில் வாசலில் இருந்து தற்போதைய அரசு மருத்துவமனை வரை நாதஸ்வர வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்றனர் .. அதை பலர் கண்டு களித்தனர் ..

ஸ்ரீரங்கம் திருவானைக்கா கோவில் கோபுரங்களில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு , ரெங்கநாதருக்கு நிறைய அலங்காரம் செய்யப்பட்டு, திருவானைக்கா மற்றும் மலைகோட்டை கோவில்களிலும் விக்டோரியா மகாராணி நீடூடி வாழ அர்ச்சனை செய்யப்பட்டன ..

ராணிக்காக , இரண்டு பாகவதர்கள், திரளான மக்களுடன் சித்திரை வீதிகளில் ஹரிநாமம் பாடிக்கொண்டு வலம் வந்தனர். இந்த வேலைகளை செய்தோம் என்று மூன்று ஐயங்கார்களும் ஒரு நாயுடுவும் கையொப்பம் இட்டுள்ளனர்

  • விஜயராகவன் கிருஷ்ணன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...