
புடலங்காய் கடுகு பச்சடி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய புடலங்காய் – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – ஒன்று (சிறியது),
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – அரை கப்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா அரை டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
நறுக்கிய புடலங்காயை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். அரை டீஸ்பூன் கடுகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து… வெந்த காய் ஆறியதும் அதனுடன் கலக்கவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து… எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.