
தொன்னை இட்லி
தேவையானவை
இட்லி மாவு – ஒரு கப்,
கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உடைத்த முந்திரிப் பருப்பு – 10,
வாழை இலை – 2 (டிபன் சாப்பிட பயன்படுத்தப்படும் வாழை ஏடு),
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உடைத்த மிளகு – சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை தாளித்து, இட்லி மாவுடன் கலக்கவும்.
வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.