To Read it in other Indian languages…

Home சமையல் புதிது நவராத்திரி ஸ்பெஷல்: நவதானிய சுண்டல்!

நவராத்திரி ஸ்பெஷல்: நவதானிய சுண்டல்!

navathaniyam - Dhinasari Tamil

நவதானிய சுண்டல்

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்
கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை ,
சிவப்பு சோயா, வேர்க்கடலை, காய்ந்த பட்டாணி -தலா 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு -தேவையான அளவு.

அரைக்க:
தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -4
சோம்பு – கால் தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
இஞ்சி – சிறிய துண்டு.

sundal - Dhinasari Tamil

செய்முறை:

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.