
பாம்பே சாம்பார்
தேவையானவை:
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – சிறு துண்டு,
பூண்டு – 4 பல்,
கடலை மாவு – 4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும்.
நன்கு கொதி வந்த பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால்… இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சூப்பர் சைட் டிஷ் ரெடி