குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லிமாவு – ஒரு கப்
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்(அ) பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
காயம் – சிறிதளவு
செய்முறை:
- அடுப்பை ஏற்றித் தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து இட்லி மாவில் விடவும்.
- பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குழிப்பணியாரச் சட்டியைக் காய வைத்து எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூனால் மாவைக் குழிகளில் விட வேண்டும். பிறகு சிறிது எண்ணெய் விட வேண்டும்.
- பணியாரம் வெந்த பிறகு திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். சூடாகப் பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்:
- இதற்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடியும் தக்காளித்தொக்கும் நன்றாக இருக்கும்.
- மாவில் மஞ்சள் தூள் சேர்த்தும் பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டும் செய்ய வித்தியாசமான சுவையாக அமையும்.