
புதினா லஸ்ஸி
தேவையானவை:
தயிர் – ஒரு கப்,
சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய புதினா – கால் கப்,
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையானது
செய்முறை:
தயிரை கெட்டியாக கடையவும். புதினா, சர்க்கரை, சீரகம், உப்பு ஆகிய வற்றை சேர்த்து, நைஸாக அரைத்து, தயிருடன் கலக்கவும். மேலே சிறிதளவு புதினா இலைகளைத் தூவி பரிமாறவும்