
பேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை
தேவையான பொருட்கள் :
·முட்டைகோஸ் – 1/4 கிலோ
·பச்சைபயிறு – 1 கப் ( 3 மணி நேரம் ஊறவைக்கவும்)
எண்ணெய் – சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1/2 தே.கரண்டி
· சீரகதூள் – 1/4 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· பச்சைபயிறினை சுமார் 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். முட்டைகோஸினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
· ஊறவைத்த பச்சைபயிறினை மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும். ஒவனை முற்சூடு செய்யவும்.
· கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + அரைத்த பச்சைபயிறு + தூள் வகைகள் சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வதக்கி சிறிது நேரம் ஆறவைக்கவும்.
· இதனை சிறிய சிறிய வடைகளாக தட்டி, அவன் ட்ரேயில் அடுக்கி , அதன்மீது சிறிது எண்ணெயினை Spray செய்யவும். மூற்சூடு செய்யபட்ட ஒவனில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
· ஒருபக்கம் நன்றாக வெந்தபின் ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பிவிடவும்.
· திரும்பவும் ட்ரேயினை அவனில் மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்.சுவையான சத்தான வடை ரெடி.
கவனிக்க:
முட்டைகோஸினை சிறிது வதக்கினால் தான் வடை நன்றாக வரும்.
முட்டைகோஸினை வதக்குவதால் வடையாக தட்ட எளிதில் வரும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.