பொட்டுக்கடலை குழம்பு
தேவையானவை:
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
தேங்காய் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பொட்டுக் கடலை – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க:
பட்டை – 1 துண்டு
எண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கொடுத்திருக்கும் பொருட்களில், சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தையும் காயும் எண்ணையில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் எண்ணையை காய வைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான குழம்பு இது.