
கரிசலாங்கண்ணி கூட்டு
தேவையானவை:
கரிசலாங்கண்ணிக்கீரை – ஒரு கட்டு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
பாசிப்பருப்பு – 100 கிராம்,
தேங்காய்த் துருவல் – சிறிய கப்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
கரிசலாங்கண்ணிக்கீரையை ஆய்ந்து, அலசி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். பாசிப்பருப்பை குழைவாக வேகவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் சேர்த்து நீர் தெளித்து நைஸான விழுதாக அரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கவும்.
வாணலியில் வேகவைத்த கீரை, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து, வேகவைத்த பாசிப்பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்துக் கொதிக்கவிட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: கரிசலாங்கண்ணி மஞ்சள்காமாலை உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும்; முடி வளர்சிக்கு உதவும்.