
கண்டந்திப்பிலி ரசம்
தேவையானவை:
கண்டந்திப்பிலி – 10 துண்டுகள்,
காய்ந்த மிளகாய் – 2,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
நெய், -ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… மிளகு, கண்டந்திப்பிலி, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து, நீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து புளியைக் கரைத்து சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டுக் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இந்த ரசம், உடல் வலியை நீக்கும். ஜுரம் விடும் சமயத்தில் கஞ்சியுடன் இந்த ரசத்தை சேர்த்துச் சாப்பிடலாம்.