வெஜிடபிள் – கீரை சூப்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய முளைக்கீரை – ஒரு கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் – சிறிதளவு,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
வெண்ணெய், நெய் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு கீரை, கோஸ் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, சோள மாவைக் கரைத்து விட்டு, தேவையான நீர் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்துக் கலந்து சூடாக சாப்பிடவும்.
குறிப்பு: சாப்பிடுவதற்கு முன்பாக இந்த சூப் குடித்தால், நன்கு பசி எடுக்கும்.