― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஒரு பொருளில் இத்தனை தீர்வா? வெந்தயத்தில் விளையும் நன்மை!

ஒரு பொருளில் இத்தனை தீர்வா? வெந்தயத்தில் விளையும் நன்மை!

- Advertisement -

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது. மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.

வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.

20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.

வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும். வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.

மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.

ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.

இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும். 20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்

வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டது. இவை சர்க்கரை நோயாளிகளின் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் ரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இத்தன்மையானது சமைத்த மற்றும் சமைக்காத வெந்தயத்தில் உள்ளது.

ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேளை, என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்தக் கொள்ளவேண்டும்.

பொடியாக இடித்த வெந்தயத்தை தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும்போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
வெந்தயம் சாப்பிடுவது தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் அவசியம்.

உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும். எனவே அதிக கேலாரிஸ் கொடுக்கக்கூடிய குறிப்பாக சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை சீராக்குவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், ரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை ரத்தில் குறைக்கிறது.

நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள், ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளை குணமாக்க வெந்தயத்தை முளைக்க வைத்து சாப்பிடலாம்.

வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை நீங்கும்.

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைமுடியின் அடிக்கால்களில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு, முடி உதிர்வது குறையும்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறு போன்ற பிரச்சனைகளை வெந்தயம் குணமாக்குகிறது.

சிறிது வெந்தயத்தை மென்று தின்றதும், 2 சிறிய வெங்காயத்தை மோரில் நறுக்கி போட்டு அதை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

சிறிதளவு வெந்தயத்துடன் 2 வெற்றிலையை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் விலகும்.

உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. அதுவே 1 டம்ளர் மோரில் வெந்தயம், சீரகப்பொடி கலந்து குடித்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

வெந்தயத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்திருக்கிறது. ஊறுகாய் தயாரிப்பில் வெந்தயம் கெடாது காக்கும் பொருளாக அதனுடன் சேர்க்கப்படுகிறது.

வெந்தயம், எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து தயாரிக்கும் தேநீர் பன்னெடுங்காலமாக காய்ச்சலைத் தணிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயக் கீரையைக் கொண்டு அவ்வப்போது தயாரிக்கும் பசையைக் கொண்டு தலைக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிப்பதால் தலைமுடி செழுமையாக வளரவும், தலைமுடி நல்ல வண்ணத்தைப் பெறவும், பொடுகுத் தொல்லை ஒழியவும் செய்கிறது.

வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதால் ‘எக்ஸிமா’ எனப்படும் தோல் நோய், தீப்புண்கள், சீழ் பிடித்த கட்டிகள் மற்றும் மூட்டுகளில் வாதநீர் கோர்த்து வீக்கம் கண்டு வலித்தல் ஆகியன குணமாகின்றன.

வெந்தயம் உள்ளுக்கு சாப்பிடுவதால் கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பலப்படுகிறது. மேலும், பிரசவத்தின்போது குழந்தைப் பிறப்பதைத் துரிதப்படுத்துகிறது.

வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பெண்களின் ஹார்மோன் சுரப்பிகள் சரியான நிலையில் செயல்படுவதோடு மார்பகங்களும் வனப்புற விளங்கும்.

வெந்தயத்தை இரவு முழுதும் நீர் விட்டு ஊறவைத்து, காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்க பொடுகுகள் போகும்.

வெந்தயத்தை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து முகத்துக்குத் தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.

வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி விட முகப்பருக்கள் குணமாகும்.

வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகின்றது.

வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்கக் கூடியது. கற்கள் வராமல் தடுக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கிக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு தினம் இரண்டு முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையையும் பொன் வண்ணத்தையும் தரும்.

5 கிராம் வெந்தயத்தை வேகவைத்துக் கடைந்து எடுத்து அத்தோடு போதிய தேன் சேர்த்துக் கொடுக்க தாய்ப்பால் பெருகும்.

முடி கொட்டுகிற பிரச்னைக்கு வெந்தயம் மிகச்சிறந்த நிவாரணி ஆகும். முடி கொட்டுதல், பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயம் இளநரையையும் போக்கக்கூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300 மி.லி தேங்காய்எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில் குளிக்க வேண்டும்.

இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கெட்ட கொழுப்பு சத்தான எல்.டி.எல். கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்புச்சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

தீப்பட்ட புண்களின் மீது வெந்தயத்தை அரைத்து மேற்பூச்சாக பூசி வர விரைவில் புண்கள் ஆறும். வடுக்கள் தோன்றாது.

வெந்தயப் பொடியை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
முக்கியமாக வெந்தயம் பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. காரணம், அதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பிரசவத்துக்கு பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு வெந்தயம் மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, வயிறு உப்பிசம், வயிற்று வலி போன்றவைக்கு சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட வலி குறையும்.

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் நம் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டனர். இட்லிக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்ப்பதும் இந்த ஆரோக்கிய அடிப்படையில்தான்.

வெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.
உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.

வெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி. தொடர்ந்து வெந்தயத்தை உணவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும். மூல வியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.

மாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.

வெந்தயத்தை 8 மணிநேரம் ஊறவைத்து, அதைபருத்தி துணியில் மூடிவைத்து பின் மீண்டும் சிலமணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளைகட்டி விடும். முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல்வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

வெந்தயத்தைப் பொடிசெய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.

வெந்தயத்தையும், கோதுமையையும் லேசாக வறுத்து பொடி செய்து காபி அல்லது தேநீராகத் தயாரித்து அருந்தலாம். உடலுக்கு உறுதியும் நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஏற்படும்.

வெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சாதரண வெந்தயத்தை விட அவற்றை முளைகட்டிச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும். இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம்.இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும்.

வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கல்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முரை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப் படியான வைட்டமின்சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.
வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.

இது டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

முளைகட்டிய வெந்தயம் இதயத்துக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்னைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

முடி வளர்ச்சிக்கு வெந்தயம்

கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, 10 நிமிடம் ஊற வைத்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வலிமையோடு வளரும்.

வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முறை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலை அலசிவிட்டு, ஈரமான கூந்தலில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலசினால், பல கூந்தல் பிரச்சனைகளைப் போக்கலாம்.

வெந்தயக் கீரையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அதனை எடுத்து, தயிர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து, தலைக்கு தடவி 45 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஒருவேளை வெந்தயக் கீரை இல்லாவிட்டால், வெந்தயத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.

பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியான ஸ்கால்ப் இருந்தால், அதனைப் போக்குவதற்கு வெந்தயப் பொடியில், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, கூந்தலுக்கு தடவ வேண்டும்.

வெந்தயப் பொடியில் பால் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பிற்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

முகத்திற்கு

வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version