spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுசூட்டினால் கண்கள் பொங்குகிறதா? எளிய டிப்ஸ்!

சூட்டினால் கண்கள் பொங்குகிறதா? எளிய டிப்ஸ்!

- Advertisement -
eye

தூக்கமின்மை, நீண்ட நேரத்திற்கு டிஜிட்டல் சாதனங்களை பார்த்தல், குறைந்த ஒளியில் நீண்ட நேரமாக புத்தகம் படித்தல், அலர்ஜிகள், தவறான பார்வை பரிந்துரை, பிரகாசமான வெளிச்சத்தில் தென்படுதல் மற்றும் இதர கண் பிரச்சனைகள் தான் சில பொதுவாக காரணமாக பார்க்கப்படுகிறது. கண்கள் களைப்படையும் போது பலவித அசௌகரியங்கள் ஏற்படும். கண் சிவந்து போதல், எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், வறண்ட அல்லது நீர் பொங்கும் கண்கள், மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை, வெளிச்சம் பட்டால் அதிகமாக கூசுதல், தலை, கழுத்து, தோள்கள் மற்றும் முதுகில் வலிகள் ஆகியவைகள் இதனால் ஏற்படக்கூடிய சில பொதுவான அறிகுறிகளாகும். பொதுவாக இந்த அறிகுறிகள் காலையில் ஏற்படுவதில்லை. மாறாக கண்களால் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய வேலை பார்க்கையில் இந்த அறிகுறிகள் தென்படும். இதனை சரி செய்ய மருந்து கடைகளில் பல வித சொட்டு மருந்துகள் கிடைத்தாலும் கூட இதனை குணப்படுத்துவதற்கு சில இயற்கையான வழிகளும் உள்ளது. இதோ, கண்களின் களைப்பை போக்க முதன்மையான 10 வழிகள்…

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் கண்களை சுற்றியுள்ள தசைகளை ஆசுவாசப்படுத்தும். அதே நேரம், கண்ணீர் சுரப்பிகளை ஊக்குவித்து, கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.

  1. கண் இமைகளின் மீதும் புருவத்திற்கு மேலே தசைகளின் மீதும் உங்கள் விரல்களை கொண்டு 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
  2. கண் இமைகளுக்கு கீழ் உள்ள எலும்புகளின் மீது 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
  3. கன்னப் பொட்டு மற்றும் மேல் தாடையெலும்புகளின் மீதும் மசாஜ் செய்யுங்கள்.
  4. இதனை தினமும் 1 அல்லது 2 முறை செய்யுங்கள். குறிப்பு: மசாஜ் செய்யும் போது சில துளி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். உள்ளங்கை சிகிச்சை களைப்படைந்த கண்களுக்கு அமைதியை ஏற்படுத்த உள்ளங்கை சிகிச்சையை பயன்படுத்தலாம்; குறிப்பாக நீங்கள் உங்கள் கணினி, மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி முன்பு நீண்ட நேரம் அமரும் போது. இந்த சிகிச்சைக்கு முக்கிய காரணமே கண்கள் மேலும் சோர்வடையாமல், அதனை அமைதியான நிலைக்கு கொண்டு வருவதே.
  5. உங்களுக்கு வசதியான நிலையில் நேராக அமர்ந்து கொள்ளவும். 2. உள்ளங்கைகளை ஒன்றாக சேர்த்து வேகமாக தேய்த்து, சூட்டை உண்டாக்கவும். 3. கண்களை மூடிக்கொண்டு, சூடாக இருக்கும் உங்கள் உள்ளங்கைகளை அதன் மீது வைக்கவும். கண் இமைகளின் மீது என ஒரு அழுத்தமும் கொடுக்க வேண்டாம். 4. அமைதியாக இருந்து இந்த இருளை ஒரு 30 நொடிகளுக்கு மகிழ்ந்திடுங்கள். 5. கண்களை மெதுவாக திறந்து சுற்றி பார்க்கவும். 6. ஒரு முறை இதை செய்ய உட்கார்ந்தால் 3-5 முறை வரை செய்யவும். 7. இதனை நாள் முழுவதும் அடிக்கடி செய்யுங்கள். வெயில் சிகிச்சை என்பது களைப்படைந்த மற்றும் சோர்வடைந்த கண்களை அமைதியுறச் செய்யும் மற்றொரு பயனுள்ள வழிமுறையாகும். சூரியனில் இருந்து கிடைக்கும் அதிமுக்கிய வாழ்க்கை ஆற்றல்கள் உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த சிகிச்சை உங்கள் உடலில் வைட்டமின் டி சுரக்கவும் உதவும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானதாகும். வெயிலில் கருத்து போவதை தடுக்க இந்த சிகிச்சையை காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே செய்யவும். 1. விடியற் காலையில் வெயில் அடிக்கும் இடத்தில் நில்லுங்கள். 2. கண்களை மூடிக் கொண்டு கண் இமைகளின் மீது சூரிய ஒளி படுமாறு நிற்கவும். 3. கண்களின் மீது வெப்பத்தை உணருங்கள். மெதுவாக உங்கள் கண்களை மேலும், கீழும், வலமிருந்து இடம் மற்றும் இடமிருந்து வலம் என அசைக்கவும். 4. இந்த செயல்முறையை 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யவும். 5. பின் உள்ளங்கை சிகிச்சையை செய்யவும். 6. இதனை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவும். குறிப்பு: வெயில் சிகிச்சையின் போது, காண்டேக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடி அணிந்து கொள்ளாதீர்கள். மேலும் இந்த சிகிச்சைக்கு பின் உள்ளங்கை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகும். அப்போது அதிகப்படியான பயனை பெற முடியும். சீரான முறையில் கண்களுக்கான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் கண்கள் களைப்படைவதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யும் போது கண்களில் இரத்த ஓட்டம் மேம்படும், கண்களின் தசைகள் நீட்சியடையும். மேலும் கவனமும் ஒருமுனைப்படுத்துதலும் மேம்படும். * ஒரு நீளமான பென்சில் அல்லது பேனாவை பிடித்து அதன் மீது கவனம் செலுத்தவும். அது தெளிவாக தெரியும் தூரம் வரை, மெதுவாக அதனை உங்கள் கண்களின் அருகில் கொண்டு வரவும். பின் உங்கள் பார்வையை விட்டு நீண்ட தூரத்திற்கு அதனை நகர்த்தி செல்லுங்கள். இதனை 10-15 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள். மேலும் வலமிருந்து இடமும், இடமிருந்து வலமும் கண்களை சில நொடிகளுக்கு சுழற்றவும். சிறிது இடைவேளை விட்டு கண்களை கொண்டு விழிக்கவும். இதனை 4-5 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள். இந்த பயிற்சியை ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கு செய்திடவும். இந்த கண் பயிற்சியை தினமும் செய்து வந்தால் கண்கள் அயர்ச்சி அடையாமல் தடுக்கப்படும். அதேப்போல் கண் பார்வையும் மேம்படும். மிதமான கண் அயர்ச்சிக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்க குளிர்ந்த நீரையும் பயன்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கண்களைச் சுற்றி சோர்வடைந்த தசைகளை அமைதிப் பெற செய்து, கண் வீக்கங்களை குறைக்கும். எப்போதெல்லாம் கண்கள் களைப்படைந்து சோர்வடைகிறதோ, அப்போதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு சிறிது குளிர்ந்த நீரை முகத்தின் மீது தெளிக்கவும். இதனால் கண்களுக்கு உடனடி அமைதி கிடைக்கும். அதிக செறிவான நிவாரணத்திற்கு, மென்மையான ஒரு துணியை குளிர்ந்த நீரில் முக்கி எடுத்து, நீரை பிழிந்து விடுங்கள். இந்த குளிர்ந்த துணியை மூடிய கண் இமைகளின் மீது 1 நிமிடத்திற்கு வைக்கவும். தேவைப்படும் போது இதனை தொடரவும். கண் அயர்ச்சியுடன் வீக்கமும் உள்ளதென்றால், குளிர்ந்த ஒத்தடமும் கொடுக்கலாம். சுத்தமான துணியில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை போட்டு மூடவும். இதனை மூடிய கண் இமைகளின் மீது வைக்கவும். கண் வீக்கம் 5-10 நிமிடத்திற்குள் குறையத் தொடங்கும். கண்களின் அயர்ச்சியை போக்க குளிர்ந்த ஒத்தடம் மற்றொரு வழியாக உள்ளது. இது கண்களை சுற்றியுள்ள தசைகளை அமைதியடைச் செய்யும், களைப்பை குறைக்கும் மற்றும் வறண்ட கண்களுக்கு இதமளிக்கும். கண் வீக்கத்தையும் இது சிறப்பாக குறைக்கும். 1. மென்மையான துணியை வெப்பமான நீரில் முக்கி எடுத்து பிழிந்திடுங்கள். 2. வசதியான முறையில் படுத்துக் கொள்ளவும். கண்களை மூடிக்கொண்டு, வெப்பமாக இருக்கும் துணியை கண் இமைகளின் மீது போடவும். 3. 1 நிமிடத்திற்கு அமைதியாக இருந்து, மெதுவாக மூச்சு விடவும். 4. துணியை மாற்றி விட்டு இதனை 3-4 முறை செய்யவும். 5. ஒரு நாளைக்கு இதனை 1-2 முறை செய்யலாம். கண்களின் களைப்பிற்கு உடனடி நிவாரணம் அளிக்க சீமைச்சாமந்தி டீ பைகளையும் பயன்படுத்தலாம். சீமைச்சாமந்தியின் இதமளிக்கும் மற்றும் ஓய்வளிக்கும் தன்மை உங்கள் கண்களின் அழுத்தத்தை விரைவாக போக்கும். கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவும். 1. 2 சீமைச்சாமந்தி டீ பைகளை வெந்நீர் கப்பில் 5 நிமிடங்களுக்கு போடவும். 2. டீ பைகளை எடுத்து விட்டு, ஒன்றை குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், மற்றொன்றை சமையலறை அலமாரியில் வைக்கவும். 3. வெப்ப சிகிச்சைக்கு, சமயலறையில் வைத்த டீ பையை மூடிய கண் இமைகளின் மீது 5 நிமிடங்களுக்கு வைக்கவும். 4. குளிர்ந்த சிகிச்சைக்கு, குளிர் சாதன பெட்டியில் வைத்த டீ பையை மூடிய கண் இமைகளின் மீது வைக்கவும். 5. இதனை எப்போது தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். மேலும் 2-3 கப் சீமைச்சாமந்தி டீயை பருகினால் தலைவலி நீங்கும். கண் அயற்சியினால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் இது. அயர்ந்த மற்றும் சோர்வடைந்த கண்களுக்கு இயற்கையான அமைதியளிக்கும் பொருளாக பன்னீர் செயல்படுகிறது. இதமளிக்கும் தன்மையை அதிகமாக கொண்டுள்ளது இது. கூடுதலாக கண்களை சுற்றியுள்ள சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கவும் கருவளையங்கள் மற்றும் கண் வீக்கங்களை போக்கவும் கூட இது உதவுகிறது. 1. கண்களின் மீது கொஞ்சம் குளிர்ந்த நீரை தெளிக்கவும். பின் சுத்தமான துண்டை கொண்டு முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். 2. 2 பஞ்சுருண்டையை பன்னீரில் முக்கிடவும். 3. படுத்து கொண்டு, கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஈரமான பஞ்சுருண்டைகளை கண்களின் மீது வைத்திடவும். 4. இதனை தினமும் இருமுறை செய்திடவும். கண்களின் களைப்பை உடனடியாக போக்க வெள்ளரி துண்டுகளும் உதவிடும். அதிலுள்ள துவர்ப்பி குணங்கள், கண்களை சுற்றியுள்ள சோர்வடைந்த தசைகளுக்கு இதமளிக்க உதவிடும். மேலும் கண் வீக்கங்களை குறைக்கவும் கருவளையங்களை போக்கவும் இது உதவும். 1. மிதமான அளவில் உள்ள வெள்ளரிக்காய் ஒன்றை 20-30 நிமிடங்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்திடவும். 2. அதனை பெரிய துண்டுகளாக நறுக்கி, அதனை சோர்வடைந்த கண்களின் மீது வைத்திடவும். 3. இதனை தினமும் 1-2 முறைகள் செய்திடவும். இந்த சிகிச்சையை உருளைக்கிழங்கை கொண்டும் செய்யலாம்.

கண்களின் அயர்ச்சியை குறைக்க பாலும் உதவுகிறது. பாலில் உள்ள கொழுப்பு அயர்ந்த உங்கள் கண்களுக்கு இதமளித்து அமைதியடையச் செய்யும். அதே நேரம் கண் எரிச்சலை எரிச்சல் மற்றும் கண் வீக்கங்களை குறைக்கவும் இது உதவுகிறது. 1. குளிர்ந்த பாலில் பஞ்சுருண்டையை முக்கவும். 2. இதனை மென்மையாக, சில நிமிடங்களுக்கு மூடிய கண் இமைகளின் மீது தடவவும். 3. அமைதியாக இருங்கள். பாலின் குளிச்சியளிக்கும் தன்மை மாயங்களை நிகழ்த்திடும். 4. இதனை தினமும் ஒரு முறை செய்யலாம்.

கூடுதல் டிப்ஸ்: 1. திரையின் முன் நீங்கள் செலவிடும் போது, 20 நிமிடத்திற்கு ஒரு முறை, உங்களிடம் இருந்து 20 அடி தூர தொலைவில் உள்ள பொருளை 20 நொடிகளுக்கு பார்க்கவும். 2. கணிப்பொறி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்த்தால், சீரான முறையில் இடைவேளைகள் எடுத்துக் கொள்ள நினைவூட்டும் மென்பொருள் ஒன்றை பயன்படுத்துங்கள். உதாரணத்திற்கு, ஐ லியோ, ஐ ரேவ் போன்றவைகளை பயன்படுத்தலாம். 3. உங்கள் கணிப்பொறி அல்லது மடிக்கணினி திரை உங்கள் கண்களில் இருந்து 20-26 இன்ச் தூர் தொலைவில் தான் இருக்க வேண்டும். மேலும் கண்களின் மட்டத்தை விட கீழே தான் இருக்க வேண்டும். 4. கண் அயர்ச்சியின் போது அளவுக்கு அதிகமான கண் அழகு சாதனங்களை பயன்படுத்தாதீர்கள். 5. வெயில் அடிக்கும் போது வெளியே சென்றால் சன் க்ளாஸ் அணிந்து கொள்ளுங்கள். 6. கண்கள் வறண்டு போனால் செயற்கை கண்ணீரை பயன்படுத்துங்கள். 7. வீட்டிற்குள் அல்லது அலுவலகத்திற்குள் இருக்கும் போது கண்கள் வறண்டு போவதை தடுக்க வேண்டுமானால், காற்றில் ஈரப்பதம் சேர்ந்திட ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள். 8. போதிய அளவிலான தூக்கம் தேவை. தூக்கமின்மையால் தொடர்ச்சியான கண் அயர்ச்சி ஏற்படும். 9. கண்கள் ஈரப்பதத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க கண்களை அடிக்கடி மூடி திறங்கள். 10. ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிகமாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். 11. கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கொண்டுள்ள மருந்துகள்/உணவுகளை உண்ணுங்கள். 12. கண் அயர்ச்சியை குறைக்க அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடியுங்கள். 13. கண்களின் ஆரோக்கியத்திற்கு, கண் மருத்துவரிடம் சென்று, சீரான முறையில் கண் சோதனையில் ஈடுபடுங்கள்.

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஜஸ் கட்டி துண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில்அடித்துக் கொள்ளவும். தயார் செய்ய கலவையை ஒரு பவுளில் ஊற்றி கொள்ளவும். சிறிது பஞ்சில் தயார் செய்ய குளிர்ந்த கற்றாழை கலவையை தொட்டு, கண்களின் மீது வைக்கவும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க, உடனடி பலன் கிடைக்கும்.

ஒரு கப் தண்ணீரில், ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பெருஞ்சீரக நீரை தயார் செய்து கொள்ளவும். தயாரித்த கலவை நன்கு ஆறி, குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகு, அந்த நீரை கொண்டு கண்களை கழுவவும்.
ஒரு பாத்திரத்தில், அரை கப் தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், அந்த நீரை குளிர வைக்கவும். இப்போது, குளிந்த நீரை கொண்டு கண்களை கழுவவும். மாற்றாக, தயாரித்த நீரில் சில துளிகளை கண்களுக்குள் நேரடியாகவும் விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe