June 23, 2021, 1:52 pm
More

  ARTICLE - SECTIONS

  தூர எறியாதீர்கள்.., தொல்லை நீக்கும் தோல்கள்..!

  Skin - 1

  வேண்டாம் எனத்தூக்கிப் போடும் தோல்ககளில் மருத்துவ குணங்களும், பயன்களும் உள்ளன.

  ஆரஞ்சு தோலில் உள்ள மருத்துவ குணத்தின் மூலமாக இளமையை பெறலாம். அத்துடன் வயிற்று சார்ந்த பிரச்சினைகளையும் இது தீர்க்கும். இதே போன்று வாழைப்பழ தோல், உருளை கிழங்கு தோல், தர்பூசணி தோல், வெங்காய தோல் போன்றவற்றை கூறலாம்.

  பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்க்க தர்பூசணி தோல் மற்ற உணவு பொருட்களின் தோல்களை விட சிறப்பாக செயல்படுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

  வாழைப்பழ தோல்
  உலக அளவில் 40 மில்லியன் வாழைப்பழ தோல் குப்பையாகவே வீணடிப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கேரட்டினோய்ட்ஸ், பாலி பீனால்ஸ் போன்றவை சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் முதலியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை கொண்டவையாம்.

  மேலும், ஷூ-வை பாலிஷ் செய்வதற்காகவும், காயங்களுக்கு பேண்டேஜாகவும், தாவரங்களுக்கு உரமாகவும் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.

  வெங்காய தோல்
  இது வரை வெங்காயத்தின் நன்மைகளை மட்டுமே நாம் அறிந்திருப்போம். ஆனால், வெங்காயத்தின் தோலை பற்றி துளி கூட நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளதாம்.

  குறிப்பாக இரத்தம் உறைதலை தடுக்கவும், சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைத்து கொள்ளவும், உடல் வீக்கங்களை குறைக்கவும் இதனை பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  முட்டை ஓடு
  முட்டை ஓடை அப்படியே தூக்கி போடாமல் நமது உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இதை அரைத்து பொடியாக்கி முக வெண்மையாக்கவும், பற்களின் உறுதிக்காகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

  எலுமிச்சை தோல்
  எலுமிச்சை தோலை கொண்டு எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. நீரை நன்றாக கொதிக்க விட்டு அதில் இதன் தோலை சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து உடனடியாக எடையை குறைத்து விடலாம்.

  உருளை கிழங்கு தோல்
  சாதாரணமாக நாம் தூக்கி வீசுகின்ற இந்த உருளை கிழங்கு தோலில் பலவித நன்மைகள் உள்ளதாம். இதை முகத்தில் தடவினால் முகம் நீண்ட காலம் இளமையாக இருக்குமாம். இதை பாத வெடிப்புகளில் தடவி வந்தால் வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

  கிரேப்ப்ரூட்டின் தோலில் பலவித சத்துக்கள் ஒளிந்து கொண்டுள்ளன. இதில் பெக்டின் என்கிற மூல பொருள் அதிக அளவில் நிரம்பி உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.

  மேலும், நார்சத்து இதன் தோலில் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் பயன்படும். இந்த தோலை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டிய பின், சிறிது தேன் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  பூசணி
  வைட்டமின் எ, சி, ஈ, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் நிறைந்தது பூசணி. இதன் தோலையும் சேர்த்தே அரைத்து கொண்டு அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் பால்,

  கால் ஸ்பூன் இலவங்க பொடி ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகத்தை நீரால் கழுவினால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து போகும். அத்துடன் சருமத்தின் செல்களும் இளமையாக இருக்கும்.

  தர்பூசணி தோல்
  தர்பூசணி பழத்தை சாப்பிட்டாலே தாம்பத்திய ரீதியாக பல்வேறு நன்மைகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இதன் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 நரம்பு சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தி உடலுக்கு வலு சேர்க்கும்.

  அத்துடன் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபடவும், சிறப்பான தாம்பத்தியத்தை வெளிப்படுத்தவும் தர்பூசணி தோல் உதவும்.

  வேர்க்கடலை
  வேர்க்கடலை தோலை தூக்கி எரியாமல் அதை நீரில் ஊற வைத்து, மக்கிய பின்னர் அதனுடன் பேக்கிங் சோடா கொஞ்சம் சேர்த்து உரமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

  இது தாவரங்களுக்கு சிறந்த இயற்கை உரமாக இருக்கும் என இயற்கை விவசாயத்திலே குறிப்பிடுகின்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-