Home நலவாழ்வு தீரா நோயும் தீர்க்கும் திப்பிலி!

தீரா நோயும் தீர்க்கும் திப்பிலி!

Thippili
Thippili

திப்பிலியின் மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” ) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.

கொடி வகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப் பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அளவு உள்ளதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும்.

திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது.

காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது.

பச்சைத் திப்பிலி கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
திப்பிலியின் மருத்துவப் பயன்கள்:

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்.

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.

திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும்.

இருமல், இரைப்பு, கோழை, ஈளை, சுரம், வாயு நீங்க சிறந்தது. பசியின்மை, தாது இழப்பு குணமாகும் தன்மை கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் வல்லமை கொண்டது.

திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி , பேதி , தொழுநோய் , கபம் , இருமல் , மார்புசளி , சுவாச பிரச்சனை போன்றவைகளுக்கு மிக முக்கிய மருந்தாகும் .

2.திப்பலித் தூள் 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து தேனுடன் கலந்து , உண்டு வர குரல் வளம் பெறும் .

3.தேமல் குணமாக திப்பிலி தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து , தேனில் கலந்து காலை , மாலை உண்டுவர தேமல் குணமாகும்.

4.வயிற்று வலி , வயிற்று பொருமல் குணமாக திப்பிலி , மிளகு , தோல் நீக்கிய சுக்கு , இவற்றை வறுத்து தூள் செய்து , அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து கொடுக்க வேண்டும் . 3 வேளை 7 நாட்கள் சாப்பிட குணம் கிடைக்கும் .

5.திப்பிலி பொடியையும் , கடுக்காய் பொடியையும் சம அளவு எடுத்து தேனில் குழைத்து , அரை ஸ்பூன் காலை , மாலை தொடர்ந்து உண்டு வர இளைப்பு நோய் குணமாகும் .

  1. வல்லாரை சாற்றில் திப்பிலியை 7 முறை ஊறவைத்து , அதை தொடர்ந்து சாப்பிட மூளை சுறுசுறுப்பாக இயங்கும் . ஞாபக சக்தி அதிகரிக்கும் .
  2. திப்பிலியை உண்டுவர ஆண்மை பெருகும் .
  3. திப்பிலியை பொடியாக்கி 1 – 2 விகிதத்தில் வெல்லம் கலந்து உண்டுவர விந்து பெருகும்

9.திப்பிலியை இடித்து பொடியாக்கி 1 தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வர இருமல் , கபம் , வாய்வு நீங்கும் . செரிமானம் அதிகரிக்கும் .

  1. திப்பிலியை பொடிசெய்து பசுவின் பால் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல் , வாய்வு தொல்லை மற்றும் மூப்பிணிகள் நீங்கும்.

11.திப்பிலியை சுத்தம் செய்து,நெய்யில் வறுத்து , தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் . பின்பு இதில் அரை தேக்கரண்டி எடுத்து , அதில் அரை தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொண்டைக் கட்டு , கோழை , நாக்குச் சுவையின்மை நீங்கும் .

  1. திப்பிலியை வறுத்து பொடிசெய்து , அரைகிராம் எடுத்து தேனில் கலந்து , காலை மாலை உண்டுவர இருமல் , தொண்டை கம்மல் , வீக்கம் , பசியின்மை , தாது இழுப்பு , ஆகியவை நீங்கும் .இரப்பை, ஈரல் ஆகியவை பலம் பெறும் .
  2. திப்பிலி , மிளகு , சீரகம் இவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாக வறுத்து பொடியாக்கி , 1கிராம் அளவு நெய்யில் கலந்து உண்ண வயிற்று வலி குணமாகும் .
  3. திப்பிலி , ஓமம் , கருஞ்சீரகம் இவற்றை லேசாக வறுத்து பெருங்காயம் சம அளவு எடுத்து பொடியாக்கி , வெந்நீர் அல்லது மோரில் கலந்து உண்ண செரியாக் கழிச்சல் மந்தம், வயிற்று பொருமல் , வாய்வு தொல்லை ஆகியவை தீரும் .

திப்பிலி 1 மடங்கு , துளசி 3 மடங்கு எடுத்து பொடி செய்து தேனில் உண்டு வர சளி , இருமல் , இளைப்பு தீரும் .

  1. திப்பிலி 10 கிராம் , தேற்றான் விதை 5 கிராம் சேர்த்து , பொடியாக்கி சுடு நீரில் 5 கிராம் போட்டு 7 நாட்கள் காலையில் குடித்து வர வெள்ளை , பெரும்பாடு நீங்கும்.
  2. திப்பிலி 200 கிராம் , மிளகு , சுக்கு வகைக்கு 100 கிராம் , சீரகம் 50 கிராம் , பெருஞ்சீரகம் 50 கிராம் , அரத்தை 50 கிராம் , இலவங்க பட்டை 25 கிராம் ,ஓமம் 50 கிராம் , தாளீச பத்திரி , இலவங்கப் பத்திரி , திரிவலை , இலவங்கம் , ஏலம் , சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் எடுத்து வறுத்து , பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன் விட்டு பிசைந்து அரை தேக்கரண்டி 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு , ஈளை , இருமல் , வாய்வு குணமாகும் .

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version