November 30, 2021, 7:50 am
More

  கொரோனா அண்டாமல் இருக்க… சித்த மருத்துவ டிப்ஸ்!

  முன்னெச்சரிக்கை மற்றும் வெளியில் சென்று வந்து நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால்,

  neem thulsi
  neem thulsi

  கொரோனா நம்மை அண்டாமல் இருக்க… வந்தது போல் நமக்கு சந்தேகம் வந்தால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இவற்றை கடைபிடியுங்கள்!

  இந்த அலையில் அறிகுறிகள் இல்லாமல் எவரும் வருவதில்லை. அதுதான் உண்மை. குடும்பத்தில் ஓர் உறுப்பினருக்கு பாசிட்டிவ் என்று வந்தால், அல்லது எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் ஏதோ ஒரு நேரத்தில் பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கும் பாசிட்டிவ் என்று வந்தால், அவர்களது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது.

  அப்படிப் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, உடனே சோதனைக்குச் செல்வதுதான்.

  சோதனைக்காக சாம்பிள் கொடுத்து விட்டு அதன் முடிவுகளுக்காக காத்திருக்கும் நாலைந்து நாள் இடைவெளியில் போது கூட மருந்து எடுத்துக் கொள்ளத் தொடங்க வேண்டும்.

  1. ஒரு டீஸ்பூன் நிலவேம்பு குடிநீர் சூரணம், அரை டீஸ்பூன் யஷ்டி சூரணம் (அதிமதுரம்) இரண்டையும் கலந்து, 80 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாகத் தயாரித்து 5 நாட்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை இதைக் குடிக்க வேண்டும்
  2. ஆடோதோடை குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் 60 மிலி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை குடிக்க வேண்டும். குறிப்பாக, சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருந்தால் அல்லது சுவாசிப்பதில் லேசான சிரமம் இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை இதனை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் மோசமடைந்தால் CT ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம்.
   மேலும்,
  3. திப்பிலி ரசாயனம் அரை டீஸ்பூன் ஒரு நாளைக்கு இரண்டு முறை
  4. வயிற்றுப்போக்கு என்றால் Tab. Qura மூன்று வேளை எடுத்துக் கொள்ளலாம் (பலருக்கு 4 வது நாளில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது)
  5. தொண்டை கரகரப்பு, இருமல், எரிச்சலுக்கு தாளிசாதி வடகம்
  6. சர்க்கரை – நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்பவராயிருந்தால்… அதனை வழக்கம் போல் தொடரவேண்டும். சர்க்கரை, இரத்த அழுத்த அளவு அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  7. ரத்த உறைதல், பக்கவாதத்தைத் தடுக்க, சித்தரத்தை, சுக்கு, லவங்கப்பட்டை ஒவ்வொன்றும் ஒரு கிராம் எடுத்துக் கொண்டு, கஷாயம் செய்து, ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இதனுடன் உப்பு கலந்த நீரால் வாய் கொப்புளிக்க வேண்டும்.

  தூய நீராவியால் ஆவி பிடித்தல்

  லேசான எண்ணெய் அல்லாத உரப்பு இல்லாத உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், புளிப்பான மோர் கண்டிப்பாக தவிர்க்கவும்

  காய்கறிகள் மற்றும் பழங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

  Qura என்பது குடசபாலை பட்டை . Impcops SKM LSS ஆகிய நிறுவனங்கள் சரியான மூலிகைகளை சேர்த்து செய்கிறார்கள். அதை மட்டும் பார்த்து வாங்கினால் நல்லது

  வயிற்றுப்போக்கு இருந்தால், ஓமம் கலந்த இட்லி சாப்பிடலாம். (இட்லி மாவில் ஓமம் கலந்து வேகவைத்து சாப்பிட வேண்டும்)

  காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கு இருந்தால், அதுவும் கோடைகாலத்தில் இருந்தால்… வீட்டில் தயாரிக்கப்பட்ட உப்பு சர்க்கரை கரைசல் அல்லது அரிசி கஞ்சி எடுத்துக் கொள்ளலாம்.

  vapour 1
  vapour 1

  தலைவலி என்பது நீர்ச்சத்து இழப்பைக் காட்டுவது மற்றும் குறைக்கப்பட்ட ஆக்ஸி செறிவூட்டலின் அறிகுறி.
  சோர்வு அதிகரிக்கும் என்பதால் உணவைத் தவிர்க்க வேண்டாம்.

  உடல் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவை சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்ள வேண்டும். (ஒரு தெர்மா மீட்டர், ஆக்சிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது)

  ஆக்ஸிஜன் செறிவூட்டலை மேம்படுத்தி சுவாசத்தை சீராக்க, வசதியான படுக்கை நிலையை மேற்கொள்ளலாம்.
  தொடர்ந்து, உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.

  முன்னெச்சரிக்கை மற்றும் வெளியில் சென்று வந்து நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டால்,
  நிலவேம்பு குடிநீர் சூரணம் ஒரு டீஸ்பூன் மற்றும் அதிமதுரம் (யஷ்டி சூரணம்) அரை டீஸ்பூன், 80 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று நாட்களுக்கு பருக வேண்டும். காலை மாலை இரு வேளையிலும் புதிதாகத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

  • டாக்டர் திருநாராயணன் திருமலைசுவாமி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-