― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுபூவ பூவ பூவ பூவே..! சேவையும், தேவையும்..!

பூவ பூவ பூவ பூவே..! சேவையும், தேவையும்..!

- Advertisement -
flowers

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள்

  • அல்லிப்பூ – செல்வம் பெருகும்
  • பூவரசம்பூ – உடல் நலம் சீராகும்
  • வாடாமல்லி – மரண பயம் நீங்கும்
  • மல்லிகை – குடும்ப அமைதி ஏற்படும்
  • செம்பருத்தி – ஆன்ம பலம் கூடும்
  • காசாம்பூ – நன்மைகள் அதிகரிக்கும்.
  • அரளிப்பூ – கடன்கள் நீங்கும்
  • அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை
  • செம்பருத்தி – நோயற்ற வாழ்வு
  • ஆவாரம் பூ – நினைவாற்றல் பெருகும்
  • கொடி ரோஜா – குடும்ப ஒற்றுமை
  • ரோஜா பூ – நினைத்தது நடக்கும்
  • மரிக்கொழுந்து – குலதெய்வம் அருள்
  • சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
  • நந்தியாவட்டை – மகப்பேறு உண்டாகும்
  • சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது
  • சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
  • மனோரஞ்சிதம் – தேவர்களின் அருள் கிட்டும்
  • தாமரைப்பூ – செல்வம் பெருகும்
  • நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம்
  • முல்லை பூ – தொழில் வளர்ச்சி உண்டாகும்
  • பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்
  • தங்க அரளி (மஞ்சள் பூ) – கிரக தோஷம் நீங்கும்
  • பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்.

பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுகள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது. மேலும் இறைவனுக்கு அர்ச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் போன்றவற்றை காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான.. ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி அதில் போட்டு மூடிவிடலாம்.

நம்மில் பலரும், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை, தங்களது வாகனங்களில் முன்பக்கம் கட்டுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இதனால் தீமைகள் உண்டாகக்கூடும்.

சிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும். இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும். செம்பருத்தி நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது.

அதில் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தாமரை, சாம்பா, ரோஜா, மல்லிகை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

வெள்ளை நிற மலர்கள் சிவனுக்கு உகந்தது. மகிழம் பூ, நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம், செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.
ஊமத்தம் பூ, நாகசேர் பூ, பாரி சாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

சிவனுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களும் அன்னை பார்வதி தேவிக்கும் அர்ச்சிக்கலாம். அதைத் தவிர வெள்ளை தாமரை, புல் மலர், சாம்பா (சம்பங்கி பூ) , முட்கள் நிறைந்த பூக்கள், சாமலி வகை பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.

சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் போன்றவற்றை கடவுள் துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.

விஷ்ணுவிற்கு பிங்க் நிற தாமரை, குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள், கெவ்ரா பாசந்தி போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம்
மகாலக்ஷ்மிக்கு பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா
அர்ச்சனை செய்யலாம்.

ராமர் -சாமலி பூ
அனுமான். -சாமலி பூ
தாத்தாரேயர் -மல்லிகைப்பூ
ஸ்ரீ கிருஷ்ணர் -நீல நிற தாமரை(3),பாரி சாதம், நந்தியா வட்டம்
பிரம்மா -நந்தியா வட்டை மற்றும் வெள்ளை நிற தாமரை
சரஸ்வதி. – வெள்ளை நிற தாமரை, வெள்ளை நிற பூக்கள்
மகாகாளி -மஞ்சள் நிற அரளி பூ
சனீஸ்வரர் _நீல நிற மலர்கள்
சூரிய பகவான் -தாமரை மலர்

எந்த மலர்களை சமர்ப்பிக்க கூடாது :
சிவா : சாம்பா பூ, தாழம் பூ
விநாயகர் : தாழம் பூ,
பைரவர் : நந்தியா வட்டம்.

பெண்கள் தலையில் சூட

பூக்களைச் சூடும் கால அளவு.
முல்லைப்பூ – 18 மணி நேரம்
அல்லிப்பூ – 3 நாள்கள் வரை
தாழம்பூ – 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ – அரை நாள்கள் வரை
செண்பகப்பூ – 15 நாள்கள் வரை
சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள்:
ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடும் முறை:
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும்.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

நம்மை சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை (observation) அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version