
பூனைக்காலி வெப்பநாடுகளில் சாதாரணமாக வளரும். இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். காயில் சுமார் ஏழு விதைகள் இருக்கும். காய்களின் மேல் மிருதுவான வெல்வெட் போன்ற சுனை இருக்கும். இது உடம்பில் பட்டால் நமச்சல் ஏற்படும். இது விதை மூலம் இன விருத்திசெய்யப் படுகிறது.
மருத்துவக் குணங்கள்:
பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்து சூரணம் செய்து கொண்டு ஐநூறு மி.கிராம் ஆயிரம் மி.கிராம் அளவு வரை தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.
பூனைக் காலி விதை, சுக்கு, திப்பிலி மூலம், கிராம்பு, கருவாப்பட்டை, வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை, பூனைக்கண் குங்கிலியம் இவைகளை குறிப்பிட்ட அளவு எடுத்து சூரணம் செய்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் காலை, மாலை இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்க்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்
பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது.
பூனைக்காலி விதையுடன் நெல்லிக்காய் தூளை சேர்த்து, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட, ஆண்மை குறைபாடுகள் விலகிவிடும். அதுமட்டுமல்ல. பார்கின்சன் சிண்ட்ரோம், எனும்நோயின் பாதிப்புகளை, நாம் சிலசமயம் நேரிடையாகக் கண்டிருக்கலாம்.

நரம்புமண்டல இயக்கத்துக்கும், உடலின் செயல்பாட்டுக்கும் இன்றியமையாததாக விளங்கும், டோபாமைன் வேதிச்சத்து, பூனைக்காலி விதைகளில், செறிவாக இருக்கிறது. பூனைக்காலி விதைகளை தினமும் நீரிலிட்டு காய்ச்சி, கசாயம் போல குடித்துவந்தால், நடுக்கம் தந்த நடுக்குவியாதிகளுக்கு, உற்சாகமாக குட்பை சொல்லமுடியும் என்கிறார்கள் மூலிகை மருத்துவர்கள்.
சிறுபூனைக்காலி எனும்
கொடிவகைகளில், அதன் பழம், சிறிதாக, இளமஞ்சள் வண்ணத்தில் காணப்படும். இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பாதிப்புகள் விலகி, உடல் வலிமையாகி, நலமுடன் விளங்கும். கழற்சிக்காய், சிற்றாமுட்டி வேர் இவற்றை நன்றாக அரைத்து, பாலில் கலந்து சுண்டக் காய்ச்சி இரவில் குடித்துவர, மலச்சிக்கல் தீர்ந்துவிடும். கடுக்காய், சீந்தில் மொந்தம் வாழைப்பழமும் மலச்சிக்கலைப் போக்கும்.
பூனைக்காலி விதைகளை தூளாக்கி, தினமும் காலையும், மாலையும் பாலில் கலந்து குடித்துவர, இரத்த சர்க்கரை அளவு சீராகி, சர்க்கரை பாதிப்புகள் சரியாகிவிடும்.
பூனைக்காலி வேர்களை அரைத்து, வீக்கங்களின் மேல் வைத்துக்கட்ட, வீக்கங்கள் வடிந்துவிடும்.
பூனைக்காலி விதைப்பொடி, அஸ்வகந்தா பொடி இவற்றை பாலில் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரவில் குடித்துவர, நரம்புகளில் இருந்த பலவீனம் விலகி, கைகால்களின் நடுக்கம் தீரும். பக்க வாதமும் குணமாகும். ஆண்மை பெருகும்.
பூனைக்காலி விதை, ஜாதிக்காய், திப்பிலி, நிலப்பனங்கிழங்கு, கசகசா இவற்றை தூளாக்கி, பாலில் கலந்து வேகவைத்து, நெய்யை சேர்த்து, ஆறவைத்து, அதில் தேனைக் கலந்து, தினமும் குடித்துவர, உயிராற்றல் அதிகரிக்கும்.
பூனைகாலி விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் . அதை வாங்கி , மேல் உள்ள தோலை நீக்கி , பாலில் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும் . பால் சுண்ட வற்ற வேண்டும் .ஆட்டுப்பால் பயன்படுத்துவது மிகவும் நல்லது . பின்பு உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . அதில் 2 கிராம் அளவு எடுத்து , பாலில் காலை மாலை என இருவேளை உண்டு வர வேண்டும் . அதுமட்டுமல்லாமல் , மேற்சொன்ன பாலில் ஊறவைத்து பொடியாக்கிய பூனைகாலி விதை பொடியுடன் சம அளவு அமுக்கிரா கிழங்குப் பொடி சேர்த்து , பசும்பாலில் கலந்து உண்டு வர நல்ல பலன் கிடைக்கும் .
உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வரை காலை, மாலை இரு வேளை பாலுடன் அருந்திவர ஆண்மை உண்டாகும்.
ஒரு லிட்டர் பசும் பாலில் முந்நாற்று இருபது கிராம் பூனைக் காலி விதையைப் போட்டு, பால் வற்றும்வரை நன்கு காய்ச்சவேண்டும். விதையை எடுத்து நன்கு உலர வைத்துப் பொடி செய்துகொண்டு, தேவையான அளவு நெய் விட்டு இளவருப்பாக வறுத்து, சீனிப்பாகு இரண்டு பங்கு கலந்து நன்கு கிளறி சுண்டைக்காய் அளவு உருட்டி தேனில் ஊறவைக்க வேண்டும். காலை, மாலை இரு வேளை ஒரு உருண்டை வீதம் வெள்ளை, வெட்டை, பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் அதிகமாகப் பெருகுதல் முதலியவைகளிக்கு கொடுத்து வர, இவை குணமாகும்.
பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை இவற்றுடன் தண்ணீர் விட்டான் கிழங்கு, முள் இலவு, நெல்லி இவைகளின் வேரையும் எடுத்து, உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். சீந்தில் சர்க்கரை, கற்கண்டு, மேற்கண்ட பொடி இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு ஒன்றாகக் கலந்து அதிலிருந்து ஐநூறு மி.கிராம் முதல் ஒரு கிராம் வீதம் நெய்யுடன் கலந்து காலை, மாலை இருவேளை உண்டு வர ஆண்மை பெருகும்.
பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில் நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து அதன் சுனையை மெதுவாகச் சுரண்டி தேனுடன் நன்கு குழகுழப்பு பதம் வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை தினந்தோறும் காலையில் சிறுவர்களுக்கு ஒரு மேஜைக்கரண்டியும், பெரியவர்களிக்கு இரண்டு மேஜைக் கரண்டியும் நான்கு நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, கழிசல் உண்டாக்கி, வயிற்றிலுள்ள புழுக்களும் சாகும்.
பூனைக்காலி காயை இதன் விதைகளை நீக்கி விட்டு நன்றாக உலர்த்தி, இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதனை முறைப்படி கஷாயம் இட்டு, வடிகட்டிக் கொண்டு அதில் சிறிது காட்டத்திப்பூ சேர்த்து நாற்பது நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைத்து, தக்க அளவு எடுத்து அருந்தி வர, ரத்தசோகை நோய் குணமாகும். கை கால் வீக்கமும் வடியும்.
பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் கலந்து அருந்தி வர ஊழி நோய், சுரம் முதலியவைகளில் காணப்படும் வாதம், பித்தம், கப நோய் நீங்கும்.
பூனைக்காலி வேரை அரைத்து யானைக்கால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கும் இதர வீக்கங்களிக்கும் பற்றிடலாம். பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது.
சித்த மருத்துவத்தில் பூனைக்காலியானது பல சூரணங்களிலும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது.
சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை பூனைக்காலி விதையுடன் இன்னும் சில மூலிகை கலந்து பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். இதற்கான பொடிதயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.மேக நோய் குணப்படுத்தும்பூனைக்காலி விதையை மட்டும் வாங்கி தனியாக பொடித்து வைக்கவும். மேக நோய் என்னும் சிபிலிஸ் என்பது தொற்று நோயால் வரக்கூடியது. குறிப்பாக பாலுறவால் ஏற்படும் தொற்று ஆகும். இது ஒருவகை பாக்டீரியாவால் உண்டாகிறது.பாதுகாப்பற்ற பாலுறவால் இவை உண்டாகிறது. இந்நோய் தாக்கப்பட்டால் தொடர்ந்து 6 மாதங்கள் வரை இருக்கும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பல்வேறு உடல் உபாதைகள் உண்டாக கூடும்.பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் 1 கிராம் அளவு பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இவை மேக நோயை படிப்படியாக குறைக்க செய்யும். ஆண்களும் இதை குடிக்கலாம்.பார்கின்சன் சிண்ட்ரோம்மூளை நரம்பு மண்டலத்தில் சுரக்கும் டோபமைன் உற்பத்தி குறைவதால் நரம்புமண்டல பாதிப்பு உண்டாகிறது. இந்த டோபமைன் வேதிச்சத்தானது பூனைக்காலி விதைகளில் செறிவாக இருக்கிறது. இதன் விதை சிறந்த நரம்பு டானிக். பார்க்கின்ஸன் நோய் என்னும் நடுக்குவாதத்துக்கு பூனைக்காலி விதை சிறந்த பலன் அளிக்கும். பூனைக்காலி விதையை தண்ணீரில் விட்டு கஷாயமாக்கி குடித்து வந்தால் இந்த நோய் குணமாகும்.பூனைக்காலி விதை உருண்டைபூனைக்காலி விதையை மருந்தாக எடுக்காமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.பொட்டுக்கடலை – 250 கிராம்பூனைக்காலை விதை- 50 கிராம்கேழ்வரகு மாவு -ஒரு தேக்கரண்டி,பனைவெல்லம் – இனிப்புக்கேற்ப,தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டி,நெய் – தேவைக்கேற்ப,உலர் பருப்புகள் – தேவையெனில்செய்முறைவாணலியில் பூனைக்காலி விதை சேர்த்து வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, கேழ்வரகு அனைத்தையும் சேர்த்து வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும்.நெய் விட்டு உலர் பருப்புகளை ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து நெய் விட்டு உருண்டையாக்கி பிடிக்கவும். சத்தான சுவையான உருண்டை தயார்.இதை பூப்படைந்த பெண்களும் வயது வந்த ஆண்களும் குடித்து வந்தால் போதும். நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.