சூலை நோய் நீங்க…
ஆகாரம் உட்கொண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வகை வயிற்றுவலி உண்டாகும். காக்கட்டான் வேர், சிவதை வேர், சுக்கு. கடுகு ரோகிணி, திராட்சைப் பழம் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் காய்ச்சி சுண்ட வைத்து ஓர் ஆழாக்கு ஆக்கி, வேளைக்கு கால் ஆழாக்கு சாப்பிட்டு வந்தால் கழிச்சல் உண்டாகி குலை நோயின் வேகம் குறையும்.
மூலம், முளை மூலத்திற்கு…
வெள்ளை வெங்காயத்தையும் பனங்கற்கண்டையும், சம அளவில் நெய்யில் வதக்கி, நன்றாக அரைத்து கடுக்காயளவு இரண்டு வேளை சாப்பிடலாம். சுத்தரிக்காயை தீயில் சுட்டு சாம்பலாக்கி வெளியே பூசலாம்.
மார்பு வலிக்கு…
அகத்திக்கீரையைக் காய வைத்து இடித்து, சவித்து காலை, மாவை இருவேளையும் அரை தோலா தூள் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மார்பு வலி (நெஞ்சு வலி) குணமாகும்.
வெந்தயக் கீரையை 250 மில்லி நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் தேன் கலந்து ஒவ்வொரு வேளையும் இரண்டு அவுன்ஸ் அருந்தி வர நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மார்பு வலி குணமாகும்.
வீக்கம் சரியாக…
உடலில் எங்கு வீக்கம் ஏற்பட்டாலும் வேப்பிலையை வதக்கி வைத்துக் கட்டி வந்தால் வீக்கம் வாடி விடும்.
நன்னாரி வேரை நீர் விட்டுக் களிம்பு போல் அரைத்துப் பற்று போட்டு வந்தால் நீண்ட கால வீக்கமும் வடிந்து விடும்.
கண் எரிச்சலா?
நந்தியாவட்டை மலர்களை இரவில் கண்களில் கட்டிக் கொண்டு காலையில் எடுத்து விடலாம். இரண்டு மூன்று நாள்கள் கட்டி வந்தாலே நல்ல குணம் தெரியும்.
கற்றாழையின் சோற்றை கட்டி வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.
ஒரு துளி தாமரைத் தேன் அல்லது சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். உச்சந் தலையில் சிறிது சிற்றாமணக் கெண்ணெய் வைத்து அதக்கி விட்டால் சீக்கிரம் குணம் தெரியும்.