தாய்ப்பால் ஏன் அவசியம்?

 

 
 
னது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக, முதலவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுர ஊரும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். 
 
அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகிறார்கள். 
 
வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள் அது குழந்தையாய் இருக்கும் போது  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் போதும். இப்போது இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அனைத்தையும் விட வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் மெனக்கெட மறந்தது தாய்ப்பாலைதான்.
 
 
எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான் தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்த கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை. மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். 
 
பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பெண்கள் பால் சுரப்பதில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் மனமே காரணம். 
 
‘என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்’ என்று மனதார நினைத்தாலே போதும். பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 
 
சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்தப்பின் பால் கொடுக்காலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும்.

 
 
குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும். பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது.  எளிதில் ஜீரணமாகக்கூடியது.
 
குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்றக்கூடிய அருமருந்து. தாய்ப்பால் கொடுப்பதால் உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வை கோளாறு ஏற்படாது. 
 
 
அதில் வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் ‘ரிக்கட்ஸ்’ எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்சேரும். 
 
தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது. பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். 
 
எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். அது பெண்கள் கையில்தான் இருக்கிறது.
 
 
 
படங்கள் : கூகுள் இமேஜ்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.