Homeநலவாழ்வுஇந்த வெயில்ல... இத மட்டும் செஞ்சிடாதீங்க...! ஜாக்கிரதை!

இந்த வெயில்ல… இத மட்டும் செஞ்சிடாதீங்க…! ஜாக்கிரதை!

chilled water - Dhinasari Tamil

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது.40 டிகிரி செல்சியஸ் அல்லது
105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் இயல்பாகவே நாம் சில்லென்று ஐஸ் வாட்டரை எடுத்து மடக் மடக் என்று குடிக்க ரொம்பவே ஆசைப்படுவோம். அது என்னவோ, வெயில் நேரத்துல ரொம்பவே இதமா இருக்குற மாதிரி தோன்றும்!  அதுவும் வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி அக்கடான்னு வீட்டுக்குள் வந்ததுமே  நம்ம கண்ணுல படுற பிரிட்ஜு… அப்பாடா… என்று எண்ணத் தோன்றும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

ஆனால் இங்குதான் நமக்கு ஆபத்து இருக்கிறது. அப்படி வெயில்ல வந்ததும் ஜில்லுனு தண்ணிய எடுத்துக் குடிச்சா… நமது உடலின் சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒரு மருத்துவர் தனது நண்பருடன் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தைக் கழுவியிருக்கிறார். உடனே, அவருடைய பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார். வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும்.

ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள்.

வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வீட்டுக்குள் நிலவும் வெப்ப நிலைக்கு ஏற்ப நமது உடல் தன்னை தயார்செய்து கொள்ளவிட வேண்டும். அதன் பின்னர் தான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரையோ குடிக்கலாம்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் கட்டிகள் போடப்பட்ட தண்ணீரைக் குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். வெய்யில் நேரத்தில் மிகக்குளிர்ச்சியான ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும்!

வெயில் காலத்தில் சூடாக இருந்த சூழலில் இருந்து உடனே ஐஸ் வாட்டர் – ஜில்லுனு தண்ணீரை எடுத்து குடித்தால், அது செரிமானத்தை பாதிக்குமாம்! ஜீரண மண்டலத்தில் கோளாறு ஏற்பட்டு, அஜீரணக் கோளாறுகளுக்கு இட்டுச் செல்லும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தொண்டை அழற்சி, தொண்டைக் கட்டுதல், உள்ளிட்ட உடனடி பாதிப்புகள் உண்டாகும்! இதைத் தொடர்ந்து, சுவாசக் கோளாறும் ஏற்படும் எனவே குளிர் நீரைத் தவிர்ப்பது நல்லது!

உணவு உண்ட பிறகு குளிர் நீரைக் குடிப்பது, அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சூடு தேவைப்படுகிறது. உடனடியாக குளிர் நீர் அந்தச் சூட்டை தணித்து, கொழுப்பை கரைக்காமல், மேலும் மேலும் சேரத் தூண்டிவிடுகிறது. இதனால் கெட்ட கொழுப்பு உடலில் சேருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதயத் துடிப்பின் விகிதத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கிறது குளிர் நீர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இதனால் இதயத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்!

வெயிலில் மட்டுமல்ல, அதிக உடற்பயிற்சி செய்துவிட்டு, வியர்வை வழிய வந்து குளிர் நீர் குடிப்பது, மாடிப் படி ஏறி இறங்கி மூச்சு முட்ட குளிர் நீர் குடிப்பது இவை எல்லாமே பிரச்னை தருவதுதான். காரணம், உங்கள் உடலுக்குள் திடீரெனப் புகும் ஐஸ் வாட்டர் – உங்கள் உடலுக்கான ஒரு ஷாக் கொடுக்கும் சமாசாரம்தான்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,157FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,572FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak62: ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான நடிப்பை நடிகர் அஜித் கொடுத்திருப்பார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

Latest News : Read Now...

Exit mobile version