சந்தேகித்த பொதுமக்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவமறிந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தையை மீட்டெடுத்து குழந்தை நல ஆய்வாளர்களிடம் ஒப்படைத்தனர்.பசியால் அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்தனர்.
காவல்துறையினர் அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பெண் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது, எனக்கும் என் கணவருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டு வந்தது. தாங்க இயலாமல் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். குழந்தைக்கு கடந்த 20 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது” என்று கூறினார்.
குழந்தையை விற்க முயன்ற குற்றத்திற்காக அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவானது தெலங்கானா பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது