- Ads -
Home இந்தியா 45 நாட்கள் மரண போராட்டம்! நால்வரால் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி!

45 நாட்கள் மரண போராட்டம்! நால்வரால் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி!

மும்பையில் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 19 வயதுச் சிறுமி 45 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன் தினம் மரணமடைந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாகச் சிறுமியின் சகோதரர் ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 19 வயதுச் சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் ஜூலை 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சிறுமியிடம் அவரின் குடும்பத்தினர் விசாரித்தபோது நண்பர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக 4 நண்பர்களுடன் மும்பை சென்றுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்ததும் நண்பர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வருவதற்கு முன் இந்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்கவில்லை.

ALSO READ:  செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மொபைல் ஏடிஎம்.,!

சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமானதையடுத்து அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூலை 21-ம் தேதி சேர்க்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது பெற்றோர்கள் விவரம் ஏதும் சொல்லாமல் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை எனக் கூறி அனுமதித்துள்ளனர்.

பின்னர் ஜூலை 27-ம் தேதி தங்களது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதையடுத்து பேகம்புரா காவல்நிலையத்தில் சிறுமி குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 மாதங்களுக்கு முன்பு, என் மகள் அவரின் சகோதரனுடன் தங்குவதற்காக மும்பை சென்றார். ஜூலை 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக நண்பர்கள் 4 பேர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த விவரங்கள் எதையும் அவள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. உடல்நிலை சரியில்லை என்று மட்டும் கூறினார். அதனால் ஜூலை 16-ம் தேதி மும்பையிலிருந்து எங்களது வீட்டுக்கு அழைத்து வந்தேன். இங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது தான் என் மகளுக்கு நேர்ந்தது எனக்குத் தெரியவந்தது” எனத் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் ‘ஜீரோ எப்.ஐ.ஆர்’ பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை மும்பை Chunabhatti காவல்நிலையத்துக்கு மாற்றினர். அரசு மருத்துவமனையில் சிறுமி 45 நாள்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

காவலர்களால் அவரிடம் வாக்குமூலம் பெற இயலவில்லை. சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலத்தில் கூறிய தகவல்கள் தெளிவாக இல்லாததால் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள கடினமாக உள்ளது. பெரும்பாலான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அரசு மருத்துமனை டீன், “பாதிக்கப்பட்ட சிறுமி ம்ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை. பிரேத பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்” எனக் கூறியுள்ளார். மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையினரும் இந்த வழக்கை மூடி மறைக்கப்பார்ப்பதாகவும் இதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனச் சிறுமியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version