காலை நேர செய்தித் தொகுப்பு

1] வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரி சுட்டுக் கொன்றுள்ளார்

2] உகாண்டாவில் அதிபரின் பசுவை திருடிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; மத்திய உகாண்டாவில் அதிபர் யோவேரி முசேவேனிக்கு நீண்ட கொம்புகளை கொண்ட பசுமாட்டுப் பண்ணை உள்ளது; இந்த பசுக்கள் அங்கிருந்துதான் திருடப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்

3] லிபியாவின் கிழக்கில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் நிலையங்களைக் கைப்பற்ற, புதிய மோதல்கள் வெடித்துள்ளன

4] ”அமெரிக்காவின் கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்”: அதிபர் ஒபாமா வேண்டுகோள் -15 ஆண்டுகளுக்குமுன், உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் விமானம் ஒன்று மோதிய அதே நேரத்தில் அதனை குறிக்கும் விதமாக நியுயார்க் நகரில் மணிகள் ஒலித்தன.செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். 15 ஆண்டுகளுக்குமுன், விமான தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் இன்று நடைபெற்ற நினைவு கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, ஒரே தேசம் என்ற குணத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கர்களை வலியுறுத்தி உள்ளார்.மேலும், அமெரிக்காவை மட்டுமின்றி அதன் கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

5] இலங்கையில், மத்திய மாகாண சபையினால் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே நியமனம் பெற்றுள்ளனர்

6] சிரியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான ஒப்பந்தத்தால் திங்களன்று தொடங்கவுள்ள போர் நிறுத்தத்தில் கலந்து கொள்வது குறித்து சிரியா போராளி குழுக்கள் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை

7] ’அதிரடி’ – பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை -இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

8] 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிணற்றில் கண்டுபிடிப்பு -கிரீஸ் நாட்டில் ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

9] பச்சமுத்து சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டார்

10] கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறத்தான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்

11] தேநீர் பிரியர்களா நீங்கள்? – அப்படியென்றால் இதைப் படியுங்கள் முதலில் -சமீபத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 25 டன் அளவிலான தரம் குறைந்த டீத்தூள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று உணவு பாதுகாப்பு கழக அதிகாரி தெரிவித்தது ஊடகங்களில் வெளிவந்தது. உணவு பாதுகாப்பு கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆய்வு முடிவுகள் வெளி வந்ததும் காலாவாதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக நிலையங்களுக்கு தடை விதிக்கப்படலாம்.அது மட்டுமல்லாமல் தேயிலை விற்பனை உரிமங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் தேயிலை வாரியம் ஈடுபடலாம் என்ற செய்தியும் வெளி வந்துள்ளது.வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் தரம் குறைவான டீத்தூளில் நிறத்துக்காக பெரும்பாலும் பிஸ்மார்க் பிரவுன், பொட்டாசியம் ப்ளு, செயற்கை மஞ்சள் தூள், இண்டிகோ போன்றவைகள் உணவு பாதுகாப்பு கழகத்தால் அங்கீகரிக்கப்படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.இந்த வேதிப்பொருட்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில் அதிகபாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம் குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல விதமான உடல் நல கோளாறுகள் வரலாம்.எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானதுதானா என்பதில் கவணமாக இருப்பது நல்லது.

12] உறவு மறுத்தால் விவாகரத்து: உயர் நீதிமன்றம் -கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒருவர் அவருடைய மனைவி அவருடன் தாம்பத்யத்தில் ஈடுபட மறுத்து வந்ததால், குடும்பல நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அவருடைய மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கணவர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு விவாகரத்து அளிப்பதாகவும் கூறினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-திருமணம் என்றாலே அதில் தாம்பத்திய வாழ்க்கை நிச்சயமாக இருக்க வேண்டும். தாம்பத்திய வாழ்க்கை இல்லாத திருமணம் என்று ஒன்று இல்லை. இந்த வழக்கில் மனைவி தாம்பத்யத்துக்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார். இது ஒரு வகையில் கணவரை கொடுமைப்படுத்துவதாகும்.எனவே, அவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து அளிக்கிறோம். கணவன்-மனைவி இருவரில் யார் தாம்பத்யத்துக்கு மறுத்தாலும் விவாகரத்து அளிப்பதில் தவறு இல்லை. மருத்துவ ரீதியாக பிரச்சினை இருந்தால் மட்டுமே அது வேறு மாதிரியாக அணுகப்படும், என்று தெரிவித்தனர்

13] டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது

14] உத்தரபிரதேசத்தில் யாத்திரை: பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் மீது ராகுல் காந்தி தாக்கு ‘யானை எல்லா பணத்தையும் சாப்பிட்டு விட்டது; சைக்கிள் பஞ்சராகி விட்டது’

15] உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் 18–ந்தேதி புறப்பட்டு செல்கிறார்

16} காவிரி நீர் பிரச்சினை: வெறுப்பு பிரசாரத்தை யாரும் தூண்டிவிட வேண்டாம் சித்தராமையா வேண்டுகோள்

17] 4 நாள் பயணமாக நேபாள பிரதமர் பிரசண்டா 15–ந் தேதி இந்தியா வருகிறார்

18] அமெரிக்காவுக்கு வடகொரியா ‘திடீர்’ கோரிக்கை ‘எங்களை அணுஆயுத நாடாக அறிவிக்க வேண்டும்’

19] வெள்ள பேரிடரை நினைவில் கொண்டு மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்

20] தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை மறுஆய்வு செய்யவேண்டும் பிரதமருக்கு, ஜெயலலிதா வலியுறுத்தல்

21] சென்னையில் 2,200 விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

22] புயலுடன் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது மீட்புப்பணிகளில் ஈடுபட போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும் தமிழக டி.ஜி.பி.க்கு, தலைமைச் செயலாளர் கடிதம்

23] ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

24] கேரளா மாநிலம் முழுவதும் இன்று பக்ரித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மசூதியில் தொழுகை செய்து வருகின்றனர்

25] யு.எஸ். ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். வாவ்ரிங்கா, 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்

26] சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த 2006-2008ம் ஆண்டில் பணியாற்றியவர் கோபாலகிருஷ்ணன் (67). சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட அதிரடிப்படையில் எஸ்பியாகவும் பணியாற்றினார். இவர் பணி ஓய்வுக்கு பின், மேட்டூர் சேலம் கேம்ப் ஆதிபராசக்திநகரில் தனது சகோதரர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மதியம் இறந்தார். கோபாலகிருஷ்ணன் உடல் நேற்று இரவு மேட்டூருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இறுதி சடங்கு நடக்கிறது

27] * செங்கல்பட்டு, நத்தம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் கார்த்திக் (எ) முண்டக்கண் கார்த்திக் (25), தினேஷ் (23). இவர்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதுதொடர்பாக இருவரையும் செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் எஸ்.பி.முத்தரசி, பரிந்துரையின்படி கார்த்திக், தினேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்*

28] வங்க தேசம் மாநிலம், பங்குரா மாவட்டத்தில் நேற்று 3 பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஜாய்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

29] *சென்னை: காஞ்சிபுரம் பச்சையப்பன் விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு 3வது பட்டாலியன் மற்றும் தேசிய மாணவர்கள் இணைந்து நடத்தும் 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமுக்கு லெப்டினன்ட் கர்னல் பங்கஜ் சர்மா தலைமை வகித்தார். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு இப்பயிற்சி முகாமில் துப்பாக்கி சுடுதல், அணிவகுப்பு, பொது அறிவு, சுகாதாரம், கவாத்து பயிற்சி மற்றும் தமிழகம் கலாசாரம் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் இப்பயிற்சி முகாம்களை சென்னை குரூப் கேப்டன் தினேஷ் சூரி ஆய்வு மேற்கொண்டார்*

30] நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகிய முவரும் நீக்கம்

31] பஞ்சாப்பில் லூதியானாவில் சட்லஜ் நதியில் விநாயகர் சிலை கரைக்க சென்ற போது 4 பேர் ஆற்றில் மூழ்கியதாக தகவல் வந்துள்ளது

32] கர்நாடகா செல்லும் தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்

33] சென்னை ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு

34] ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனங்கள் மீது தாக்குதல்

35] சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

36] திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

37] திருநெல்வேலி டவுனில் பிரபல பாத்திரக் கடையில் தீ விபத்து

38] பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்