
குதிக்க வேண்டாம்; தாவ வேண்டாம்; சுவர் ஏற வேண்டாம்; நேராகப் போய் கைது செய்யலாம்… ஸ்வீட்டு எடு கொண்டாடு என அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கும் வகையில், ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீனை மறுத்த தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைதாகியுள்ள சிதம்பரம் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால், அதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தள்ளுபடி ஆன நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.