― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇஸ்ரோவின் சாதனைகளும் சோதனைகளும்!

இஸ்ரோவின் சாதனைகளும் சோதனைகளும்!

- Advertisement -

20 வருடங்களுக்கு முன்பு வரை மழை, புயல் என்பதே வெள்ளம் வந்து சூறாவளி வந்து எல்லாவற்றையும் நிரப்பி கரைபுரண்டு ஓடிய பின்பு தான் தெரியும். அப்புறம் முதலமைச்சர் ஹெலிகாப்டரிலே பார்வையிடுவார், மத்திய அமைச்சர்கள், பிரதமர் எல்லோரும் வருவார்கள்.

இன்றைக்கோ இன்று இவ்வளவு மழை பெய்யும் என வானிலை அறிக்கை மையம் சொல்கிறது. புயல் வந்தால் அதன் ஒவ்வொரு அசைவையும் நொடிக்கு நொடி கண்கானித்து இந்த இடம் வழியாக புயல் வரும் காற்று இவ்வளவு வேகத்திலே வீசும் என அறிவித்து பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பலகோடிப்பேரின் உடைமைகளையும் பாதுகாக்க முடிகிறது.

இதற்கு இஸ்ரோ பட்ட கஷ்டங்களும் நஷ்டங்களும் கொஞ்ச நஞ்சம் அல்ல. நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பே மேலைநாடுகள் ஏவுகணை தொழில் நுட்பத்திலே வெற்றி பெற்றிருந்தாலும் சோவியத் யூனியன் 1957 இல் உலகத்தின் முதல் செயற்கைகோளை அனுப்பியிருந்தாலும் 1961 இன் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியிருந்தாலும் நம் நாட்டிலே அரசு உதவியோ அன்றைய ஆட்சியாளர்களின் உதவியோ கிடைக்கவில்லை.

1960களிலே விக்ரம் சாராபாய் அவர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழு எனும் அமைப்பை ஆரம்பிக்கிறார்கள். அது அப்போதும் மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தின் பகுதியாகவே இருக்கிறது. அப்போதைய அணுசக்தி துறையின் தலைவரும் மதிப்பிற்குரிய அணுசக்தி விஞ்ஞானியும் ஆன ஹோமிபாபா அவர்களால் 1962 இல் அரசு ஆராய்ச்சி குழுவாக மாற்றப்படுகிறது.

ஏழு வருடங்களுக்கு பின்பு 1969 இல் இன்றைய இஸ்ரோ உருவாக்கப்படுகிறது. முதலிலே இது ஒரு ஜாலிக்கான ஆராய்ச்சியாகவே அன்றைய ஆட்சியாளர்களால் பார்க்கபட்டது. பணம் ஏதும் அவ்வளவாக தரப்படவில்லை. இருப்பினும் 1975 இல் நம்முடைய முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா சோவியத் யூனியனால் செலுத்தப்படுகிறது.

அதான் சோவியத் யூனியன் இருக்கிறதே நாம எதுக்கு தனியா ஆராய்ச்சி என பணம் செலவு செய்யனும் என அப்போது முதல் இப்போது வரை கம்மினிஸ்டுகளும் சோசிலிஸ்டுகளும் கேட்டே நம்மை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருந்தார்கள். இன்றைக்கும் அது தொடர்கிறது.

இஸ்ரோ செய்த ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. ஹோமிபாபா அவர்கள் மர்மமான முறையிலே விமான விபத்திலே இறக்கிறார். பின்பு தொய்விலேயே ஓடிக்கொண்டிருக்கீறது.

1979 இல் எஸ் எல் வி எனப்படும் சேட்டிலைட் லான்ச் வீக்கிள் (செயற்கைகோள் செலுத்தும் வாகனம்) முதன் முதலாக ஏவப்படுகிறது. இது 40 கிலோ எடையுள்ள செயற்கை கோளை விண்ணிலே ஏவும்.

1979 முதல் ஏவுதல் தோல்வி 1980 இல் ஏவுதல் வெற்றி 1981 இல் ஏவுதல் தோல்வி
1983 இல் ஏவுதல் வெற்றி. இவை ரோகினி வகை செயற்கைகோளை விண்ணிலே ஏவின. 1983 உடன் நிறுத்தப்பட்டது.

அடுத்து ஏஸ் எல் வி எனப்படும் ஆகுமெண்ட்டு சேட்டிலைட் லான்ச் வீக்கிள் (பெரிய செயற்கைகோள் செலுத்தும் வாகனம்) எனும் வகை ஏவுகணைளை செய்ய ஆரம்பிக்கிறார்கள். முன்பை போலவே நாலே மட்டும் செலுத்தப் படுகிறது. மூன்று தோல்வி ஒன்று மட்டுமே வெற்றி.

1987 தோல்வி 1988 தோல்வி 1992 தோல்வி 1994 வெற்றி. இது ஒரு சோதனை செயற்கைகோளை விண்னிலே நிலை நிறுத்தியது.

1993 இல் பிஎஸ் எல் வி எனப்படும் போலார் சேட்டிலைட் லான்ச் வீக்கிள் (துருவ செயற்கைகோள் செலுத்தும் வாகனம்) என்பதை இஸ்ரோ செய்ய ஆரம்பிக்கிறது. இது நாலாயிரம் கிலோ எடையுள்ள செயற்கைகோளை விண்ணிலே நிலைநிறுத்தும். பூமிக்கு இணையான சுற்றுப்பாதையிலே ஆயிரத்து இருநூறு கிலோ எடையுள்ள கோளை நிலைநிறுத்தும்.

1993 முதல் முயற்சி தோல்வி. 1994, 1996 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
1997 தோல்வி 1999 வெற்றி. 2001, 2002, 2003, 2005 – அனைத்தும் வெற்றி.

2007 – 2, 2008 – 3, 2009 – 2, 2010 – 1, 2011 – 3, 2012 – 2, 2013 – 3,
2014 – 3, 2015 – 4, 2016 – 6, 2017 – 3, – ஒன்று தோல்வி 2018 – 4, 2019 – 3, இது மொத்தம் 45 ஏவுதல்கள் அதிலே இரண்டு தோல்வி.

இது 1200 கிலோ எடையுள்ள கோளை செலுத்தும் என்பதால் முன்றாயிரம் கிலோ எடையுள்ள பொருளை செலுத்த ஜி எஸ் எல் வி எனும் ஜியோ சிக்ங்கனரஸ் சேட்டிலைட் லான்ச் வீக்கிள் ( புவி சுற்றுப்பாதை செயற்கைகோள் செலுத்தும் வாகனம்) செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

2001 இல் முதல் ஏவுதல் தோல்வி. 2003 இல் சோதனை முயற்சி வெற்றி.
2004 இல் முதல் வேலை ஏவுதல். ஜிசாட்-3 எனும் செயற்கைகோளை விண்ணிலே நிறுத்தியது. 2006 இல் தோல்வி 2007 வெற்றி 2010 – 2 முயற்சிகள் தோல்வி. 2014-2,2015,2016,2017-2,2018-3, 2019 அனைத்தும் வெற்றி.

இது நாமாகவே செயற்கைகோளை செலுத்தியது பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறது. நாம் இதுவரை 115 செயற்கைகோளை செலுத்தி பயன்படுத்தி வருகிறோம். அதிலே முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் வேறு நாடுகளால் செலுத்தப்பட்டவை. அதிக எடையுள்ள செயற்கைகோள்களுக்கு நாம் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளையே நம்பியிருந்தோம்.

இந்த ஜிஎஸ்எல்வி என்பது தான் அதிக அளவிலே எடையுள்ள பொருட்களை விண்ணிற்கு எடுத்து செல்வது. உலகிலேயே ஆறே ஆறு நாடுகளிடம் மட்டுமே அதிக அளவு பொருட்களை எடுத்துச்செல்லும் கிரையோஜெனிக் எனப்படும் அதிகுளிர் தொழில்நுட்பம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் என்பவை பிற ஐந்து நாடுகள்.

இதிலே நீங்கள் ஒரு விஷயத்தை பார்க்கலாம். சோவியத் ரஷ்யா இருக்கும் வரை அவர்களை நம்பியே இருந்தோம் என்பதை. நடுவிலே ராக்கேஷ் சர்மாவை விண்வெளிக்கு அனுப்பினார்கள் என்பதெல்லாமும் அதிலே சேர்த்திதான்.

இந்த அதிகுளிர் தொழில்நுட்பத்தை கொண்டு அதிக எடையுள்ள பொருட்களை விண்ணீலே செலுத்தலாம் எனும்போது இது தான் மனிதர்களையும் விண்ணிற்கு எடுத்துசெல்லும் அமைப்பு உடையது.

இந்த பிரச்சினையிலே தான் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் சிக்க வைக்கப் பட்டார். இஸ்ரோவும் உடைக்கப்பட்டது. இந்த தொழில் நுட்பத்தோடு வரும்போது தான் நம்பி நாராயணன் அவர்கள் கைது செய்யப்பட்டு அவமானபடுத்தப்பட்டார். இன்றுவரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

இதே போலத்தான் இந்த சந்திரயான் இறங்குதலும். இதற்கும் நாம் ரஷ்யாவையே பத்தாண்டுகள் நம்பியிருந்தோம். முதலாம் சந்திர யான் ஆராய்ச்சி கோள் 2008 இல் ஏவப்பட்டு 2009 வரை செயல்பட்டது. எப்போது? 2008 இல் 11 வருடங்களுக்கு முன்பு.

2007 இல் ரஷ்ய மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ராகோஸ்மாஸ்) நம்முடைய இஸ்ரோ ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. நிலாவிலே இறங்கும் வண்டியை ரஷ்யா செய்து தரும், இஸ்ரோ செயற்கைகோள் மற்றும் ஏவுதலை பார்த்துக்கொள்ளும் என.

ஆனால் 2013 இல் ஏவுதல் என குறிக்கப்பட்டிந்த போதும் ராகோஸ்மாஸ் இறங்கும் வண்டியை செய்து தரவில்லை. காரணங்கள் பல அதிலே மிக முக்கியமானது 2011 இல் ரஷ்யா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய சோதனை கோள் முயற்சி தோல்வியிலே முடிந்தது. அந்த போப்ஸ் கிரண்ட் என்படும் கோள் நம் விண்வெளி பாதையை விட்டே விலகவில்லை.

அந்த தொழில்நுட்பத்தை தான் நிலவிலே இறங்கவும் பயன்படுத்துகிறோம் எனவே அதை நம்பி பயன்படுத்த முடியாது என ரஷ்யா சொல்லி ஒதுங்கிக்கொண்டது. 2015 இல் நாமே இதை தனியாக செய்துவிடலாம் என முடிவு எடுக்கப்படுகிறது. கவனிங்க 2015 இல் தான் நாமே இதை தனியாக செய்யப்போகிறோம் என முடிவு எடுக்கிறார்கள்.

மூன்றே வருடங்களிலே முடித்து 2018 இல் நிலவுக்கு அனுப்புவதாக திட்டம். ஆனால் சில பல தொழில்நுட்ப சிக்கல்களால் அது நடக்கவில்லை. இறுதியாக ஜூலையிலே அனுப்பினார்கள்.

இதிலே மிகவும் சிக்கலானது நிலவிலே தரையிறங்குவது அல்ல. நிலவின் சுற்றுப்பாதையிலே செயற்கைகோளை செலுத்துவது தான்

பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் கோளை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி நிலவு சரியான இடத்திற்கு வரும்போது சரியான அளவு உந்துவிசையிலே நிலவை நோக்கி செலுத்தப்படவேண்டும். அதிக உந்துவிசை தரப்பட்டால் நிலவை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிடும். குறைந்த அளவு உந்து விசை தரப்பட்டால் நிலவிலே போய் மோதி உடையும்.

செயற்கைகோளை செலுத்தினாலும் இந்த கணக்கு மிக முக்கியம். அதை சரியாக செய்தார்கள். அடுத்து செய்யவேண்டியது நிலவிலே இறங்கும் அளவுக்கு சுற்றுப்பாதையை குறைப்பது. இதையும் சரியான உந்துவிசையிலே செய்யவேண்டும். சிறிது பிசகினாலும் நிலவிலே போய் மோதி உடையும்.

அதையெல்லாம் சரியாக செய்து வந்த சந்திர யான் இப்போது கடைசி நிலையிலே தரையிறங்கும்போது இரண்டு கிலோமிட்டருக்கு முன்பு தகவல் அனுப்புவதை நிறுத்தியிருக்கிறது. உடனே மோதி உடைந்துவிட்டது என சொல்கிறார்கள். அப்படி எடுக்கவேண்டிய அவசியமில்லை.

தகவல் கட்டுப்பாட்டை இழந்தற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடைந்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அந்த விக்ரம் இறங்கும் வண்டி தானாகவே சரி பார்த்து இறங்கும் தன்மை கொண்டது.

இன்னமும் அந்த செயற்கைகோள் நிலவை சுற்றிக்கொண்டுள்ளது. விக்ரம் வண்டியை புகைப்படம் எடுக்கவோ அல்லது அது இறங்கியதாக இருக்கும் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தை புகைப்படம் எடுக்கவோ முடியும்.

அதன்பின்பே என்ன ஆனது என தெரியவரும். நிலவின் தென்துருவம் என்பதால் கூட ஏதேனும் தொடர்பு தடை ஏற்பட்டிருக்கலாம். அது இதுவரை யாருமே இறங்க முயற்சிக்காத பகுதி. இதுவரை போயிருப்பதே அதும் மூன்று வருடங்களிலே செய்து காட்டியிருப்பதே மாபெரும் சாதனை.

நம் நாடு தான் உலகத்திலேயே செவ்வாய்க்கு முதல் முறை அனுப்பிய கோளையே வெற்றிகரமாக அனுப்பியது. செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பிய நான்காவது நாடு. சீனாவும் ஜப்பானும் கூட இந்த சாதனையை செய்யமுடியவில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை செவ்வாய்க்கு கோள்கள் அனுப்பியிருக்கின்றன.

எனவே இந்த சோதனைகளையும் தாண்டி நம் விஞ்ஞானிகள் சாதித்து காட்டுவார்கள். முன்பு போலில்லாமல் சாதனைகளை கொண்டாடும் மனநிலை வந்திருக்கிறது. வெளிநாடுகளிலே இருந்து கூட நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். உலக அரங்கிலே நம்முடைய சாதனை பேசப்படுகிறது. எனவே இது கொண்டாப்படவேண்டியது.

இது வெற்றி தான். அதைகொண்டாடுவோம். பத்து தோல்விகளுக்கு பின்பே நம்மால் நல்ல ஏவுகணை தயாரிக்க முடிந்தது ஆனால் இப்போது முதல் முயற்சியிலேயே வெற்றி. உழைத்த விஞ்ஞானிகளின் பெயருடன் அதை செய்வோம். நம் விஞ்ஞானிகள் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.!

  • பாமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version