- Ads -
Home இந்தியா காட்டிற்கு காதலியுடன் சென்ற காதலன்! முத்தத்தில் தொடங்கி..!

காட்டிற்கு காதலியுடன் சென்ற காதலன்! முத்தத்தில் தொடங்கி..!

முத்தம் கொடுக்க மறுத்ததால் பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பிங்கி (18). கடந்த வியாழக்கிழமை இவரும் இவரது ஆண் நண்பரும் பிஜாபுரி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

Double exposure lovers in the forest

அதன்பின் வீட்டிற்கு பிங்கி திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவியை தேடிய பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் மாணவியை தேடி வந்த நிலையில் வனப்பகுதியில் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றினர்.

தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் பிங்கியை கொலை செய்தது தான் என ராமன்சிங் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. வனப்பகுதிக்குள் பிங்கிக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் மறுத்ததால் அவரை பின்னோக்கி தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  இஸ்ரோ அடித்த செஞ்சுரி! வெற்றிகரமாக ஏவப்பட்ட 100வது ராக்கெட்!

கீழே விழுந்ததில் பிங்கியின் தலைப்பகுதி கல்லில் பட்டு காயமடைந்து அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ராமன்சிங்கை கைது செய்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version