
இங்குள்ள பாகிஸ்தான் அனுதாபிகள் கவனிக்க என்று கூறி, பாகிஸ்தானில்நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களை வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டுள்ளார் ஹெச்.ராஜா.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வஜரிஸ்தான் மற்றும் பலுஜிஸ்தான் ஆகிய இடங்களில் பாக்கிஸ்தானின் அரசிற்கு எதிராக மக்கள் புரட்சி. இங்குள்ள பாக்கிஸ்தானின் அனுதாபிகள் கவனிக்க – என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவரது டிவிட்டர் பதிவில் …
இது போல், பயங்கரவாதத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரித்து வந்தால் அந்நாடு துண்டு துண்டாகி சிதறிப் போகும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நாட்டிற்கு உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார் ராஜ்நாத் சிங்.
அப்போது அவர், பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டது. ஆனால் அந்நாடு மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறது! மனித உரிமை மீறல்கள் மிக அதிக அளவில் நடைபெறுவதே பாகிஸ்தானில்தான் என்று குற்றம் சாட்டினார். .
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் அந்த பாதுகாப்பு நீடிக்கும் ! இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாகப் பிரிந்தது மதத்தின் அடிப்படையில்தான்! 1971ம் ஆண்டில் மீண்டும் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தது! பாகிஸ்தானின் தீவிரவாத அரசியல் தொடர்ந்தால் பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறிவிடும் என்று எச்சரிக்கை செய்தார் ராஜ்நாத்சிங்!