தவறான வழிப்பாதையில் வந்த பேருந்து ஒன்றை இளம்பெண் ஒருவர் எதிர்த்து நின்றதும் அதனை அடுத்து அந்தப் பேருந்து சரியான பாதைக்குத் திரும்பியதுமான வீடியோ ஒன்று வைரலாகி வந்தது
இந்த நிகழ்வு குறித்து உண்மையில் என்ன நடந்தது என்ற ஒரு ஆச்சரியமான தகவலை அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் சூர்யா மணிஷ் . கேரளாவை சேர்ந்தவர் சூர்யா மணிஷ் , இந்த சம்பவம் குறித்து கூறியதாவது:
அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் கடைசியாக நடந்தது மட்டுமே இருந்தது. நான் அந்த பேருந்து ஓட்டுனருக்கு எதிராக எந்தவித சவால் விட்டபடியும் அங்கு நிற்கவில்லை. அந்த நிமிடம் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் நின்றேன்
இதற்கு முன்னால் அந்தப் பேருந்துக்கு முன்பாகவே ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. பள்ளிக்குழந்தைகள், பேருந்திலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தனர்; ஏராளமான வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. நான் நடுத்தெருவில் நின்றுகொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன்.
தொடர்ந்து நானும் முன்னோக்கிச் சென்றேன்.அந்த பள்ளி பேருந்து திடீரென இடதுபுறம் சென்று நின்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பேருந்து திரும்பிய பிறகு நான் சென்று கொண்டிருந்த சாலைப் பகுதியில் எதிரே அரசுப் பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திக் கொண்டு வந்தது
இந்த பேருந்தை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பயத்தினால் என் மூளை வேலை செய்யவில்லை. அப்படியே நின்று விட்டேன். ஆனால் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை திருப்பி எனது பயத்தை குறைத்தார். இதுதான் உண்மையில் நடந்தது
ஆனால் நான் ஏதோ அந்த பேருந்தை எதிர்த்து தைரியமாக நின்றதாக சமூக வலைதளங்களில் இட்டுக் கட்டப்பட்டுள்ளது உண்மையில் அந்த பேருந்து டிரைவருக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சாலையில் 7 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். ஆனால், இப்படி நடப்பது இதுதான் முதல்முறை” என்றார்.
இதுதொடர்பாக அந்தப் பேருந்து ஓட்டுநர் கூறுகையில், “இந்த நிகழ்வு புதன்கிழமை, பெரம்பாவூர் பஸ் டிப்போவுக்கு செல்வதற்கு முன் நடந்தது. அப்போது, அந்தப் பகுதியில் பேருந்து ஒன்றிலிருந்து, குழந்தைகள் இறங்கிக்கொண்டிருந்ததால், நான் காலியாக இருந்த வலதுபுறத்தில் பேருந்தை இயக்கினேன். அப்போதுதான், பெண் ஒருவர் சாலையில் ஸ்கூட்டர் ஒன்றில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அவர் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நகர்த்தாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் மீண்டும் இடதுபுறம் வண்டியை திருப்பிவிட்டேன். என்றார்.
When you are RIGHT it gives you a very different kind of MIGHT. See Joe a lady rider down South doesn't budge an inch to give in to an erring Bus Driver. Kudos to her. @TheBikerni @IndiaWima @UrvashiPatole @utterflea @anandmahindra @mishramugdha #GirlPower #BikerLife #BikerGirl pic.twitter.com/3RkkUr4XdG
— TheGhostRider31 (@TheGhostRider31) September 25, 2019