
உத்திரப்பிரதேச மாநிலம் எட்டாவாவைச் சேர்ந்த அஜிதேஷ் மிஸ்ரா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார்.
இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அஜிதேஷை விசாரணை செய்யும் போது அவர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, நான் என்னுடன் பணிபுரியும் பாவனா ஆர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தேன். இந்த விவகாரம் தெரிய வந்ததால் எனக்கும் திவ்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது.
இதனால் நான் அவரை கொலை செய்ய எனது நண்பன் அகில் குமாருடன் சேர்ந்து திட்டமிட்டேன். இதனைத் தொடர்ந்து என்னை பார்ப்பது போல எனது வீட்டிற்கு வந்த அகில் அங்கிருந்த பூச்சட்டியால் திவ்யாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து திவ்யா உயிரிழந்துள்ளார். மேலும் அகில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜிதேஷ், பாவனா ஆர்யா, மற்றும் அவரது நண்பர் அகில் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
SSP Etawah: Police have arrested three people in connection with the death of a woman named Divya in Etawah. The woman's husband carried out the crime along with the woman he had an affair with, and his friend. All three of them used to work in the same news channel. pic.twitter.com/5a2T4O0zmq
— ANI UP (@ANINewsUP) October 17, 2019