
உ.பி.,யில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி.,யில் ஹிந்து மஹாசபையின் தலைவராக இருந்தவர் கமலேஷ் திவாரி. இவர் ஹிந்து சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சி துவக்கினார். நேற்று(அக்.,18) லக்னோவில் உள்ள அலுவலகத்தில் இருந்த கமலேஷ் திவாரியை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை உ.பி., மற்றும் குஜராத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து உ.பி., காவல் அதிகாரி டிஜிபி ஓபி சிங் கூறுகையில், குஜராத்தை சேர்ந்த 3 பேரும், உ.பி.,யின் பிஜ்னோப்பூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் மத குருக்களையும் கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இருவரை தேடி வருகிறோம் என்றார். குஜராத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மவுலானா மோஷின் சேக்(24) குர்ஷித் அகமது பதான்(23) மற்றும் பைசான்(21) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத், பிஜ்னோர், லக்னோ மற்றும் பிற இடங்களை நாங்கள் கண்காணிப்போம், அவை விசாரணையின் போது வரும்.
கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட அலுவலகம் முன்பு பொருத்தப்பட்டிருந்த கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும் படியான நபர்கள் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் மஞ்சள் நிற பையில் இனிப்புகளுடன் வந்து சென்றது தெரியவந்தது. அதில் தான் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தீபாவளிக்காக இனிப்பு கொடுக்க வந்ததாக கூறி உள்ளே சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
UP DGP, OP Singh on #KamleshTiwariMurder:
— ANI UP (@ANINewsUP) October 19, 2019
A joint team of UP & Gujarat Police has detained 3 persons & interrogating them. Their names are Maulana Mohsin Sheikh, Faizan, & Khurshid Ahmed Pathan. Two other accused were also detained but released later, they are being monitored. pic.twitter.com/yqAEr1fN1P
Uttar Pradesh DGP, OP Singh on Hindu Samaj party leader #KamleshTiwari's murder: During the initial interrogation they (accused detained by Gujarat ATS) have accepted that they were involved, and that all three are linked to the case in some manner. https://t.co/2G6BPCLRsU pic.twitter.com/1QbOaC8G2q
— ANI (@ANI) October 19, 2019
UP DGP on #KamleshTiwariMurder: In the FIR, two people were named as conspirators – Maulana Anwarul Haq & Mufti Naeem Qazmi. These 2 have also been detained & they're being questioned. We'll monitor Gujarat, Bijnor, Lucknow & other places which will come up during investigation. pic.twitter.com/E1ueyv4NRw
— ANI UP (@ANINewsUP) October 19, 2019