புத்தாண்டு வாழ்த்துரையில் சலுகைகளை அறிவித்தார் பிரதமர் மோடி

புதுடில்லி:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை உரை நிகழ்த்தினார்.

அதன் சாராம்சம்:

வீடு இல்லாத ஏழைகள் குறைந்த வட்டியில் கடன் பெற 2 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று புத்தாண்டு உரை நிகழ்த்தினார். அதில், புதிய ஆண்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றார். குறிப்பாக, விவசாயிகள், கிராம மக்கள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், சிறு, குறு வணிகர்கள் ஆகியோருக்கான திட்டங்களை பிரதமர் அறிவித்தார்

* தீபாவளிக்கு பிறகு, நமது தேசத்தில் கறுப்பு பணத்தை ஒழிக்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது நீண்ட நாள் பயன் தரும்.

* ஊழலும், கறுப்பு பணமும் நல்லவர்களை வீழ்த்தி விடுகிறது.

* புதிய முயற்சிகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

* ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற துடிப்பு மக்களிடம் உள்ளது. அரசின் நடவடிக்கை நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்ற மரபு காப்பாற்றப்பட்டுள்ளது.

* இந்த அரசு நேர்மையான மக்களின் நண்பன்

* இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளம் அமைத்துள்ளோம்

* புது வருடத்தில் வங்கிகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.

* 50 நாட்களில் இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றம் கண்டுள்ளது.

நேர்மையற்றவர்களை திருத்தும்

* அரசு நேர்மையானவர்களை ஊக்குவிக்கும், நேர்மையற்றவர்களை திருத்தும்

* அரசின் நடவடிக்கையில், அரசு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது

* தவறு செய்த வங்கி அதிகாரிகளை தண்டனை பெறுவது உறுதி

கூடுதல் பொறுப்பு உள்ளது

* தொழில்நுட்ப உதவியோடு தவறு செய்வது பல வழிகளில் தடுக்கப்படும்

* வங்கி அதிகாரிகள் அரசின் நடவடிக்கைக்கு பெரும் ஒத்துழைப்பு அளித்தனர்

* சில அதிகாரிகள் பெரிய அளவில் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

வீடு கட்ட 2 புதிய திட்டங்கள்

* சாமனிய மக்கள் கையில் அதிகாரம் வர பாடுபடுவோம்

* புதிய வருடத்தில், புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்

* சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் பலர் வீடில்லாமல் உள்ளார்கள்

* ஏழைகள் வீடு கட்ட 2 புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்

* ரூ.12 லட்சம் வரை வீட்டுகடன்; 3 சதவீத வட்டி தள்ளுபடி

* வீடுகளை புனரமைக்க ரூ. 2 லட்சம் கடன்

விவசாயிகளுக்கு முன்னுரிமை

* கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு அதிகளவு கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி

* விவசாயிகளின் கடன் அட்டைகளை ரூபே அட்டைகளாக மாற்றப்படும்

* விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே மானியம் மற்றும் கடன் செலுத்தப்படும்

சிறு வணிகர்களுக்கு கடன்

* சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்

* சிறு வணிகர்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைக்கப்படும்

கர்ப்பிணி பெண்களுக்கு புதிய திட்டம்

* 650 மாவட்டங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி

ரொக்கமற்ற பரிவர்த்தனை
* ரொக்கமற்ற பரிவர்த்னை அதிகம் பயன்படுத்த வேண்டும். பீம் ஆப்பை அதிகம் பயன்படுத்துங்கள்.
புத்தாண்டில் பல சவால்கள் காத்திருக்கின்றன. அனைத்து தடைகளையும் தகர்த்து புது எதிர்காலம் படைப்போம்  என்று பேசினார்.