
சாலையில் செல்லும்போது பின்னால் ஆம்புலன்ஸ் வந்தது என்றால் தயவு செய்து வழி விடுங்கள். அதில் உள்ளவரின் நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள். அது தான் மனிதாபிமானம். ஆம்புலன்ஸ் என்பது வெறும் வாகனம் அல்ல .உயிர் காக்கும் சஞ்சீவினி என்ற மெசேஜ் வாட்ஸ்அப் மூலம் வலம் வருகிறது.
ஆம்புலன்ஸ் நேரத்திற்கு வராததால் சினிமா நடிகை உயிரிழந்தார்.
அதற்கு காரணம் நேரத்திற்கு வந்து சேராத ஆம்புலன்சால் மராட்டிய நடிகை உயிரிழந்த சோகமே!
மகாராஷ்டிராவில் பிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா ஜும்ஜுர் என்ற மராட்டிய நடிகைக்கு ஞாயிறு விடியற்காலை பிரசவ வலி எடுத்தது. அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிறந்த சிசு சில நிமிடங்களே உயிர் வாழ்ந்தது. பூஜாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருக்கவே அங்கிருந்த மருத்துவர்கள் அவரை உடனே மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறினர்.

அந்த மருத்துவமனை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உறவினர் சிரமப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் பிடித்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் மரணமடைந்தார்.
சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் நிச்சயம் அவர் உயிர் பிழைத்து இருப்பார் என்று கூறி மனம் வருந்துகின்றனர் குடும்பத்தினர் .
பூஜா பல மராட்டிய படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.