
பாரதத்தோடான தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தடாலடி முடிவுகளை எடுத்துவருகிறது . மேலும் எல்லையில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த தருணத்தில் இந்தியாவுக்கு தபால் சேவையை நிறுத்தி விட்டது பாகிஸ்தான். சுமார் இரண்டு மாதங்களாக பாகிஸ்தானிலிருந்து தபால் சேவை நின்றுவிட்டது.
இந்த விஷயத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். பாகிஸ்தான் செய்தது தவறு என்றார்.
எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்று ட்வீட் செய்தார் .
சர்வதேச தபால் சேவைகள் உலக தபால் யூனியன் விதிமுறையின் கீழ் பணியாற்றி வருகின்றன. பாகிஸ்தானின் இந்த செயல் அதற்கு விரோதமாக உள்ளது. பாகிஸ்தானின் தீர்மானத்திற்கு ஏற்றார்போல் தான் இந்திய தபால் துறையும் எதிர்வினையாற்றும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.