
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கோவா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம் செய்யப் பட்டுள்ளார். இவர், 1985 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களின் முதல் லெப்டினண்ட் கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை ஆளுநராக ராதாகிருஷண் மாத்தூர் (ஆர்.கே.மாத்தூர்) நியமனம் செய்யப் பட்டுள்ளார்.