கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்துள்ள நிலையில்,
திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. விராஜ்பெட் எம்.எல்.ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு திப்பு சுல்தானுக்கு அரசு விழா கொண்டாடப்படும் என்று காங்கிரஸ் அரசுவித்தபோது, அதற்கு எதிராக பா.ஜ.க மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது. அந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது
தற்பொழுது திப்பு சுல்தான் ஜெயந்தி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, திப்பு சுல்தான் ஒன்றும் சுதந்திர போராட்ட வீரர் அல்ல. திப்பு சுல்தான் தொடர்பான அனைத்தையும் கைவிட உள்ளோம்.
திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.