
தெலங்கானா தாசில்தார் விஜயா ரெட்டியை காப்பாற்ற முயன்ற டிரைவரும் தீவிர தீக்காயத்தால் இன்று மரணமடைந்தார்.
தெலங்கானாவில், தாசில்தார் விஜயாரெட்டியின் கார் டிரைவர் குருநாதம் கஞ்சன்பாக், அப்போலோ டிஆர்டிஓ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
நேற்று சுரேஷ் என்பவன் தாசில்தார் விஜயாரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, கொலை செய்தான்.

அதை அறிந்து, விஜயாரெட்டியை காப்பாற்ற முயன்ற அவருடைய கார் டிரைவர் குருநாதம் தீவிரமாக தீக் காயமடைந்தார். 80% தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குருநாதம் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
அவருடைய சொந்த ஊர் சூர்யா பேட்டை மாவட்டம் கதிடேபல்லி மண்டலம் வெலிதண்ட கிராமம். குருநாதம் மரணத்தால் வெலிதண்ட கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.