
தொப்புளில் சூரியஒளியை போன்று ஜொலிக்கும் தங்கத்தை பசு உற்பத்தி செய்வதால் தான், அதன் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் ஒரு கருத்தை கூறியுள்ளார்
மேற்குவங்க பாஜ., தலைவர் திலீப் கோஷ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவு காரணமாக மக்கள் தற்கொலை செய்வதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் வழங்கப்படுவதாக கூறினார்.
இந்நிலையில், தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பர்த்வானில் செய்தியாளர்களிடம் திலீப் கோஷ் கூறியதாவது: இந்திய பசுக்களில் ஒரு சிறப்பியல்பு உள்ளது. அதன் தொப்புளில் சூரியஒளி போன்று மின்னும் தங்கம் உற்பத்தியாகிறது.
அதன் காரணமாக தான் பசுவின் பால் தங்கம் கலந்து மஞ்சள் நிறமாக இருக்கிறது.மாடு தாயை போன்றது. அதன் பாலை உட்கொள்வதால் தான் உயிருடன் இருக்கிறோம். அப்படிப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சியாக சாப்பிடுவது கடுமையான குற்றம்.
அந்த அறிவுஜீவிகள் நாய் இறைச்சியையும் சாப்பிடுவார்களா. நாட்டு மாடுகள் தான் எங்கள் தாய், வெளிநாட்டு மாடுகள் அல்ல. இவ்வாறு திலீப் கோஷ் கூறினார். இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Foreign cows are 'aunties', Indian cows have gold in their milk: BJP's Dilip Ghosh
— ANI Digital (@ani_digital) November 5, 2019
Read @ANI Story | https://t.co/7JDgHpFTWu pic.twitter.com/R9QVVaNLTO