
ஆந்திர பிரதேச தெலுங்கு அகாடமி சேர்பர்சன் ஆக லக்ஷ்மி பார்வதியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
நந்தமூரி லட்சுமி பார்வதிக்கு ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முக்கிய பதவியை அளித்துள்ளார். லட்சுமி பார்வதி ஒய்எஸ்ஆர் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.
நந்தமூரி தாரக ராமாராவு மனைவியான லக்ஷ்மி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை தீவரமான விமர்சனங்களால் தாக்கக் கூடியவர். தொடக்கத்தில் லட்சுமி பார்வதி தனிக் கட்சி தொடங்கி சில காலம் அரசியலில் ஈடுபட்டார். பின்னர் பரபரப்பான அரசியல் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பின்னாளில், ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். ஜகன் எதிர் கட்சியில் இருந்தபோது அவருக்கு துணை நின்றார்.
ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் ஜகன் அவருக்குத் தகுந்த பதவியை கொடுத்துள்ளார் என்று கட்சியினர் மகிழ்ந்துள்ளனர். லட்சுமி பார்வதிக்கு புராண இலக்கியங்கள் மீது சிறந்த ஞானம் உள்ளது .அவர் வீட்டில் இதுபோன்ற புத்தகங்கள் நிறைய உள்ளன.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தரப்பில் பலமாக குரல் எழுப்பிய லட்சமி பார்வதிக்கு ஜெகன் அரசு நியமன பதவியை அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டிஆரின் மனைவி லட்சுமி பார்வதி, சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். பின்னாளில், ஜகன் மோகனின் கட்சிக்கு ஆயுதமாகத் திகழ்ந்தார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெலுங்கு தேசம் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். தேர்தலின்போது சந்திரபாபு நாயுடுவையும் அவர் மகன் நரா லோகேஷையும் இலக்காகக் கொண்டு தீவிரமாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். அந்த நேரத்தில் லட்சுமி பார்வதியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து தெலுங்கு தேசம் கட்சி பிரச்சாரம் செய்தது.
வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை எதிர்கொண்ட லட்சுமி பார்வதி ஜகன் பின்னால் இருந்து கொண்டு பலமாக தன் குரலை உயர்த்தினார். அவர் உண்மையில் எம்எல்சி பதவியை விரும்பினார் என்று கூறப்பட்டது. ஆர்டிசி சேர்பர்சனாக நியமிக்கப்படுவார் என்று கூட செய்தி வந்தது. ஆனால் ஜெகன் அரசாங்கம் தெலுகு அகாடமி சேர்பர்சனாக அவரை நியமித்துள்ளது.