
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பாகவத் இன்று நண்பகல் 1 மணிக்கு ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்ப்பு குறித்து, தமது கருத்தைக் கூற, தில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்.
அயோத்தி ஸ்ரீராமஜன்ம பூமி நிலம் குறித்த விவகாரத்தில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
முன்னதாக, இந்தத் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. அப்போது முதலே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து, தீர்ப்பு எப்படி வந்தாலும் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நாட்டில் அமைதியும் பரஸ்பர நல்லிணக்கமும் பேணிப் பாதுகாத்திட இரு தரப்பு தலைவர்களும் அவரவர் தரப்பு மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் முன்னர் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.