Homeஇந்தியாடாக்டர் என ஏமாற்றி... 20 பெண்களை வலையில் விழவைத்த காமுக டிரைவர்! ஐயோ கொடுமை!

டாக்டர் என ஏமாற்றி… 20 பெண்களை வலையில் விழவைத்த காமுக டிரைவர்! ஐயோ கொடுமை!

vizag doctor driver - Dhinasari Tamil

விசாகப்பட்டினத்தில் நடந்த கொடுமை இது. டாக்டர் என்று சொல்லிக் கொண்டு பெண்களை ஏமாற்றி பணம் பறித்த கார் டிரைவர். அதுவும் குண்டுப் பெண்களுக்கே வலை. சுமார் 20 பெண்களை ஏமாற்றிய காமுகன் பிடிபட்டான்.

பெண்களை பொறிவைத்து பிடித்த கில்லாடியை விசாகப் பட்டினம் போலீசார் கைது செய்தனர். ஏமாளி பெண்களுக்கு வலை விரித்து டாக்டராக நடித்து வந்தவன்… போட்டோ வீடியோ எடுத்து மிரட்டி நகையும் பணமும் பறித்து வந்தான். இறுதியில் போலீசாரின் ‘ஸ்பந்தனா’ நிகழ்ச்சியில் பாதிக்கப் பட்ட பெண் ஒருவர் புகார் கொடுக்கவே அவன் பிடிபட்டான்.

விசாரணையின் போது அவன் அளித்த விவரங்களைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாகப்பட்டினம் ‘கஞ்சரபாலம்’ என்ற இடத்தைச் சேர்ந்த அஜித்குமார் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தான். எளிதாக பணம் சம்பாதிக்க எண்ணி, ஈஸி மணிக்கு பழக்கப்பட்டு போன குமார் சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு குழுவாக மாறினான்.

பேஸ்புக்கில் போலி கணக்கு ஆரம்பித்து டாக்டர் என்று கூறிக் கொண்டான். இளம் பெண்களோடு அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டான். அதிலும் குண்டான பெண்களே அவனுடைய இலக்கு.

அவர்களுக்கு உடல் மெலிவடைய, டயட்டிங் அறிவுரை கூறுவதாக அவர்களோடு பேச்சுக் கொடுத்து நட்பு கொண்டு ஊர் கோடிக்கு அழைத்துச் சென்று அவர்களை கட்டாயப் படுத்தி வீடியோ எடுப்பது, ஃபேஸ்புக்கில் போடுவதாக மிரட்டி பணம் பறிப்பது என்று இதுவரை 20 இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டான்.

இறுதியில் ஒரு பெண் போலீசில் புகார் செய்தாள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் 31 வயது பெண் நோயாளியான தன் உறவினரை பார்ப்பதற்கு கேர் மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு அஜித் குமார் தான் ஒரு டாக்டர் என்று கூறிக்கொண்டு அறிமுகப் படுத்திக் கொண்டான்.

அவளுடைய போன் நம்பரை வாங்கி கொண்டு தொடர்ந்து தொடர்பில் இருந்து உடல் நலன் சார்ந்த அறிவுரைகள் கூறுவதாகக் கூறி அவளது தனிப்பட்ட விவரங்களை அறிந்து கொண்டான்.

பின்னர், அவளை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்தான். இறுதியில் பொறுக்க முடியாத பெண், போலீசில் புகார் செய்தாள். அதன் மூலம் அவன் வண்டவாளம் எல்லாம் வெளிப்பட்டன. அஜித் குமார் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

[poll id=”27″]

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,794FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...

Exit mobile version