
நாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் குறிப்பிட்டது… தில்லியில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி சம்ஸ்கிருத வித்யாபீடம் ஆகிய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், ஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் ராஷ்டிரீய சம்ஸ்கிருத வித்யாபீடம் என்கிற நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் செயல்பட்டு வருகின்றன.
இந்த 3 பல்கலைக் கழகங்களையும் மத்திய சம்ஸ்க்ருத பல்கலைக்கழகங்கள் ஆக மாற்றும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்!