தனது தொகுதி வாராணசிக்கு என வலைத்தளத்தில் பக்கம் துவக்கினார் மோடி

varanasi புது தில்லி: தனது தொகுதியான வாராணசியில் ஆற்றும் பணிகளுக்காக தன் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தைத் துவங்கியுள்ளார் மோடி. நகரைத் தூய்மையாக வைத்திருத்தல் இயக்கம், கங்கை நதி படித்துறைகளை தூய்மையாக வைத்திருத்தல், உள்ளூர் மக்களுடன் ஆற்றிய பணிகள், காசி பல்கலையைத் தொடங்கிய பண்டிட் மதன் மோகன் மாளவியா குறித்த நிகழ்ச்சிகள், உரைகள், தனது தொகுதியான வாராணசியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள், வாராணசியில் ரயில்வே வளர்ச்சி என பல தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. http://www.narendramodi.in/varanasi/