துப்பாக்கி முனையில் சகோதரிகள் பலாத்காரம்:5 பேர் கைது

ஜரீப்நகர் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜரீப்நகரில் சகோதரிகள் இருவரி துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற இளைஞர்கள் 5 பேர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளான இருவரும் வேலைக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றபோது அவர்களை இளைஞர்கள் 5 பேர் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது சிறுமிகளின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் பலாத்காரம் செய்தவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, பலாத்காரச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.