தேர்வுக் குழு நிராகரிப்பு: ஜுவாலா கட்டா ஏமாற்றம்

jwala-guttaபுதுதில்லி: வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்து வருகிறது. அவர்களின் திறமையை மேம்படுத்த நிதி உதவி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அவ்வகையில், பேட்மின்டன் விளையாட்டில் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேர்வு செய்யப்படாத ஜுவாலா கட்டா, தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியபோது, ‘தேர்வுக்குழு என்னை நிராகரித்தது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசை நம்பி நாங்கள் இருக்கிறோம். ஆனால், ஏற்கெனவே பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்பான்சர்களைப் பெற்ற வீரர், வீராங்கனைகளையே தேர்வு செய்துள்ளனர். இன்னும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது புரியவில்லை’ என்றார் ஏமாற்றத்துடன்.