சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக்; கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவாலும் இடம்பெற்றார்

புது தில்லி: ‘இந்தியா டுடே’ ஆங்கில வார இதழ் சிறந்த முதல்வர்கள் குறித்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம்பெற்றனர். ஒடிசாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நவீன் பட்நாயக்குக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்லனர். சொந்த மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு, அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோருக்கு 55 சதவீதம் பேரும், சித்தராமய்யாவுக்கு 38 சதவீதம் பேரும், ராமன் சிங்க்குக்கு 36 சதவீதம் பேரும், சிவராஜ் சிங் சவுகான், அகிலேஷ் யாதவுக்கு 34 சதவீதம் பேரும் அவரவர் மாநிலங்களில் ஆதரவு தெரிவித்து உள்ளனர் நாடு முழுவதுமான கருத்துக் கணிப்பில், கேஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவுக்கு 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 6 சதவீதம் பேர் சந்திரபாபு நாயுடுவுக்கும், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்குக்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.