குறை தெரிந்தும் ஆதரிக்கும் நண்பர்களுக்கு நன்றி: கிரிராஜ் சிங் ட்விட்

உங்களின் குறைபாடுகள், தவறுகள், பலவீனங்கள் என அனைத்தையும் உணர்ந்து கொண்டும், அப்போதும் நீங்கள் ஒரு ஆச்சரியமான நபர் என நினைக்கும் ஒருவரை வாழ்க்கையில் பெறுவது மிகவும் சிறப்பானது. மிக்க நன்றி நண்பர்களே என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சோனியா, ராகுல் குறித்து கருத்தைக் கூறியதில் பெரும் சர்ச்சைக்குள்ளானவர் கிரிராஜ் சிங். அவரது வீட்டுக்கு முன் காங்கிரஸார் பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவிலும், தனக்கு ஆதரவைத் தெரிவித்த நண்பர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.