ஏப்.8-ல் மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

புது தில்லி: மத்திய அமைச்சரவை இம்மாதம் 8ம் தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமைச்சரவையில் 26 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 13 பேரும், 26 இணை அமைச்சர்களும் உள்ளனர். இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்றும், அதில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முக்தர் அப்பாஸ் நக்வி அத்துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்படலாம் எனவும் தகவல் வெளியானது. காஷ்மீரில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா, அனில் தேசாய் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.