Home இந்தியா விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து

விண்ணில் பாய்ந்தது ஜிசாட் 19: பிரதமர் மோடி வாழ்த்து

1 5thefullyintegratedgslv mkiii d1carryinggsat 19atthesecondlaunchpad frontview

புது தில்லி:

இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கனரக கிரையோஜெனிக் இஞ்சினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி -மார்க் 3 ஜிசாட்-19 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியாவிலேயே முற்றிலுமாகத் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான அதிநவீன ஜிசாட்- 19 செயற்கைக்கோள் இது. இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஜிசாட்-19ஐ விண்ணில் நிலைநிறுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நான்காயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் ஜிசாட்-19 வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரயோஜெனிக் இன்ஜின் மூலம் உருவான இந்தச் செயற்கைக்கோள் முற்றிலும் இந்தியத் தயாரிப்புகளால் உருவாக்கப்பட்டதாகும். இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ, இதில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 வகையான ஆன்டனாக்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட ஜிசாட்-19 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஜிஎஸ்எல்வி எம்கே 3 – டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version